மீண்டும் வசமாக சிக்கிய ஸ்டோக்ஸ்.. வறுத்தெடுக்கும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்.. என்ன நடந்தது

0
889
Siraj

இங்கிலாந்து அணியின் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் சுற்றுப்பயணத்தின் கடைசிப் போட்டி தற்பொழுது இமாச்சல் பிரதேஷ் தரம்சாலா மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் ஒல்லி ராபின்சன் இடத்தில் மார்க் வுட் இங்கிலாந்து தரப்பில் கொண்டுவரப்பட்டார். இந்திய தரப்பில் ஆகாஷ் தீப் இடத்தில் பும்ரா மற்றும் ரிஜெக்ட் பட்டி தான் இடத்தில் தேவ்தத் படிக்கல் அறிமுகம் செய்யப்பட்டார்.

- Advertisement -

இந்த போட்டிக்கான ஆடுகளத்தை பொறுத்தவரையில் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாகத்தான் காணப்படுகிறது. தட்ப வெப்பநிலை மட்டுமே வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கிறது. காரணமாகவே இரண்டு அணியிலும் இரண்டு வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டுமே இடம்பெற்று இருக்கிறார்கள்.

மேலும் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து தைரியமாக முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான சூழல் ஆரம்பத்தில் காணப்பட்டது. இந்திய வேகப்பந்து வீச்சு ஜோடி பும்ரா மற்றும் சிராஜ் இருவரும் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்கள்.

இங்கிலாந்து அணி வழக்கமான தனது அதிரடி அணுகுமுறையை கைவிட்டு பொறுமையாக விளையாட ஆரம்பித்தது. பந்து நன்றாக ஸ்விங் ஆன காரணத்தினால், பல எட்ஜ் வாய்ப்புகளில் இருந்து இங்கிலாந்து துவக்க ஆட்டக்காரர்கள் தப்பித்தார்கள்.

- Advertisement -

அதே சமயத்தில் வேகப்பந்துவீச்சு ஒத்துழைப்பு அதிகமாக இருந்ததால் இன்று இரண்டு இந்திய வேகப் பந்துவீச்சாளர்களும் தலா 7 ஓவர்கள் வீசினார்கள். ஆனாலும் இருவருக்கும் விக்கெட் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் முகமது சிராஜ் ஜாக் கிரௌலிக்கு எல்பிடபிள்யு அப்பீல் கொண்டு வந்தார். அம்பயர் அவுட் தரவில்லை. எனவே மூன்றாவது அம்பையரிடம் டிஆர்எஸ் செல்லப்பட்டது. பந்து ஸ்டெம்ப்க்கு மேலே தாக்கியதால், அம்பயர்-கால் விதிப்படி ஜாக் கிரௌலி அவுட்டில் இருந்து தப்பித்தார்.

இதையும் படிங்க : “இந்திய கிரிக்கெட்ல காய் நகர்த்தறாங்க.. ஜுரலுக்கு வாய்ப்பில்லை.. ரிஷப் பண்ட் அவசரப்படுகிறார்” – ராபின் உத்தப்பா பேச்சு

இந்திய அணிக்கு ஜாக் கிரௌலி விக்கெட்டில் முன்பு அம்பயர்-கால் சாதகமாக வந்திருந்த பொழுது, இப்படி ஒரு விதியே இருக்கக் கூடாது என இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் பேசியிருந்தார். தற்பொழுது இதே விதிப்படிதான் அவர் தப்பித்தும் இருக்கிறார். இதற்கு இப்பொழுது ஸ்டோக்ஸ் என்ன சொல்வார்? என இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கடுமையான விமர்சனம் செய்து வருகிறார்கள்!