கொல்கத்தா 12 வருட சோகம் முடிந்தது.. மும்பை ப்ளே ஆஃப் விட்டு வெளியேறியது.. கம்பீர் திட்டம் பலித்தது

0
11028
KKR

நடப்பு 17 வது சீசன் ஐபிஎல் தொடரின் 51ஆவது போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 12 வருடம் கழித்து மும்பை அணிக்கு எதிராக கொல்கத்தா அணி சிறப்பான வெற்றியை பதிவு செய்திருக்கிறது.

இந்த போட்டியில் முதலில் டாசில் வெற்றி பெற்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. போட்டி நடைபெறும் ஆடுகளம் வழக்கமான மும்பை ஆடுகளம் போல் இல்லாமல் பந்து வீச்சுக்கு அதிக சாதகத்துடன் காணப்பட்டது. இதன் காரணமாக சுனில் நரைன், பில் சால்ட், ஸ்ரேயாஸ் ஐயர், ரகுவன்சி மற்றும் ரிங்கு சிங் ஆகியோரால் தாக்குப் பிடிக்க முடியாமல் ஆட்டம் இழந்தார்கள்.

- Advertisement -

கொல்கத்தா அணி 57 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்தது. இதன் காரணமாக அந்த அணி உடனடியாக இம்பேக்ட் பிளேயராக மணிஷ் பாண்டேவை கொண்டு வந்தது. கொல்கத்தா அணியின் இந்த முயற்சி நல்ல பலன் கொடுத்தது. வெங்கடேஷ் ஐயர் மற்றும் மனிஷ் பாண்டே ஜோடி 62 பந்துகளில் 83 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.

கொல்கத்தா அணிக்கு மணிஷ் பாண்டே 31 பந்தில் 42 ரன்கள், வெங்கடேஷ் ஐயர் 52 பந்தில் 70 ரன்கள் எடுத்தார்கள். ஒரு கட்டத்தில் அந்த அணி 180 ரன்கள் தாண்டி 200 ரன்கள் கூட இருக்கும் நிலையில் இருந்தது. ஆனால் வெங்கடேஷ் ஐயர் ரசலை ரன் அவுட் செய்ய மொத்தமும் விழுந்தது. கொல்கத்தா அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 169 ரன்கள் எடுத்தது. பும்ரா மிகச்சிறப்பாக பந்துவீசி 18 ரன் மட்டும் விட்டு தந்து மூன்று விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இஷான் கிஷான் 13(7), ரோகித் சர்மா 11(12), நமன் திர் 11(11), திலக் வர்மா 4(6), வதேரா 6(11), கேப்டன் ஹர்திக் பாண்டியா 1(3), என வரிசையாக வெளியேறினார்கள். ஒரு முனையில் தனியாக நின்று அதிரடி காட்டி விளையாடிய சூரியகுமார் யாதவ், கடைசி ஐந்து ஓவர்களுக்கு 51 ரன்கள் தேவை என்ற நிலையில், 35 பந்தில் 56 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இதைத்தொடர்ந்து ஆட்டத்தின் 19 ஆவது ஓவரில் ஸ்டார்க் டிம் டேவிட், ஜெரால்டு கோட்சி, பியூஸ் சாவ்லா மூன்று பேரையும் வரிசையாக வெளியேற்ற மும்பை அணி 18.5 ஓவரில் 145 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கொல்கத்தா அணி 24 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஸ்டார்க் 4 விக்கெட் கைப்பற்றினார். 8 தோல்விகளை அடைந்த மும்பை பிளே ஆப் வாய்ப்பை இழந்தது. பத்து போட்டியில் ஏழு வெற்றி பெற்ற கொல்கத்தா பிளே ஆப் வாய்ப்பை பிரகாசப்படுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க : 41/7.. 8வது விக்கெட்டுக்கு கலக்கிய ஜிம்பாப்வே.. பொறுமையை காட்டி பதிலடி தந்த பங்களாதேஷ்

கொல்கத்தா அணி மும்பை வான்கடே மைதானத்தில் 2012 ஆம் ஆண்டு இறுதியாக மும்பை அணிக்கு எதிராக வெற்றி பெற்றது. இந்த குறிப்பிட்ட மைதானத்தில் பத்து போட்டியில் ஒரு போட்டியில் மட்டுமே கொல்கத்தா வெற்றி பெற்று இருக்கிறது. இந்த நிலையில் 12 வருடம் கழித்து இரண்டாவது வெற்றியை மும்பையின் சொந்த மைதானத்தில் அந்த அணிக்கு எதிராக பெற்று இருக்கிறது. மேலும் ஐந்து விக்கட்டுகளை வேகமாக இழந்த பொழுது மணிஷ் பாண்டே உள்ளே கொண்டு வந்த கம்பீரின் திட்டம் இன்று பெரிய பலன் கொடுத்திருக்கிறது.

- Advertisement -