“இந்திய கிரிக்கெட்ல காய் நகர்த்தறாங்க.. ஜுரலுக்கு வாய்ப்பில்லை.. ரிஷப் பண்ட் அவசரப்படுகிறார்” – ராபின் உத்தப்பா பேச்சு

0
383
Rishabh

இந்திய கிரிக்கெட்டில் ஒரு கட்டத்தில் விக்கெட் கீப்பர்கள் இருந்த போதும், அவர்கள் நன்றாக பேட்டிங் செய்யக் கூடியவர்களாக இல்லாமல் இருந்தார்கள். இதற்குப் பிறகு மகேந்திர சிங் தோனிதான் சிறந்த விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ஆக இந்திய அணிக்கு கிடைத்தார்.

ஆனால் இதற்குப் பிறகு எடுத்துக் கொண்டால் ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன் இஷான் கிஷான், ஜிதேஷ் சர்மா மற்றும் கே எல் ராகுல் என பெரிய பட்டியல் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன்களுக்கு நீள்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய அணியின் மூன்று வடிவங்களுக்கும் விக்கெட் கீப்பராக செட்டாகி இருந்த ரிஷப் பண்ட் சாலை விபத்தில் சிக்கி ஒன்றரை வருடங்களாக விளையாட முடியாமல் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் அவர் வருகின்ற ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு களம் இறங்குவார் என்று கூறப்படுகிறது. அதே சமயத்தில் டி20 உலக கோப்பை இந்திய அணிக்கு துருவ் ஜுரல் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்படலாம் என்றும் பேசப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ராபின் உத்தப்பா கூறும் பொழுது ” ரிஷப் பண்ட் உடல் தகுதி என்பது அவர் கடந்த 1 1/2 வருடங்களாக கடினமான சூழ்நிலையில் இருந்து எப்படி மீண்டு வருகிறார் என்பதை பொறுத்துதான். அவரை வலை பயிற்சியில் பார்ப்பது நன்றாக இருக்கிறது. அவர் பந்தை நன்றாக அடித்து விளையாடுகிறார், மிடில் விக்கெட்டில் இருந்து விக்கெட் கீப்பிங் செய்கிறார். ஆனால் அவர் இந்த செயல்முறைகளை அவசரப்பட்டு செய்யக்கூடாது.

- Advertisement -

இவ்வளவு காலம், நீங்கள் சிறப்பான முறையில் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது கிரிக்கெட் விட்டு விலகி இருப்பது கடினமான விஷயம். எனவே நீங்கள் மீண்டும் சீக்கிரத்தில் வந்து வெற்றி பெற விரும்புவீர்கள். ஆனால் திரும்பி வருவதில் இப்பொழுது அவசரம் காட்டினால் அது பெரிய பின் விளைவுகளை உண்டாக்கி விடும். அவர்திரும்ப வருவதற்கு நேரம் எடுக்கும் என்று நினைக்கிறேன். வரும்பொழுது நன்றாக வருவார்.

இதையும் படிங்க : 5வது டெஸ்ட்.. அணி தேர்வில் ரோகித் வைத்த டுவிஸ்ட்.. ஆடுகளம் குறித்து ஸ்பெஷல் நியூஸ்

ஜுரலைப் பொறுத்தவரையில், இந்திய கிரிக்கெட்டில் சமீப காலத்தில் நிறைய காய் நகர்த்தல்கள் நடந்து வருகிறது. விக்கெட் கீப்பர்கள் இஷான் கிஷான் மற்றும் கேஎஸ்.பரத் ஆகியோர் நகர்த்தப்பட்டு இருக்கிறார்கள். ஐபிஎல் எப்படி செல்கிறது என்று பார்க்க வேண்டும். எனவே இப்போதைக்கு துருவ் ஜுரலுக்கு வெள்ளை பந்து கிரிக்கெட் வடிவத்தில் வாய்ப்பு இருக்காது” எனக் கூறியிருக்கிறார்.