என் வெற்றிக்கு கங்குலி ஸார் தான் காரணம்.. மனிஷ் பாண்டேவுக்கு 4 முறை இப்படி நடந்திருச்சு – வெங்கடேஷ் ஐயர் பேட்டி

0
962
Venkatesh

நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி கேகேஆர் அணி அபார வெற்றி பெற்று இருக்கிறது. இந்த போட்டியில் கேகேஆர் அணிக்கு பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு ஆட்டநாயகன் விருது வென்ற வெங்கடேஷ் ஐயர் வெற்றி குறித்துப் பேசி இருக்கிறார்.

இன்று கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்யும்பொழுது 57 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்துவிட்டது. இதன் காரணமாக இம்பேக்ட் பிளேயராக ஹர்ஷித் ராணாவுக்கு பதிலாக பேட்ஸ்மேன் மனிஷ் பாண்டே உள்ளே கொண்டு வந்தார்கள். இப்படியான சூழ்நிலையில் அவரும் நான்கைந்து முறை பேட்டிங் வாய்ப்புக்காக காத்திருந்து பின் கிடைக்காமல் போயிருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் வெங்கடேஷ் ஐயர் மற்றும் மணிஷ் பாண்டே இருவரும் மிகச் சிறப்பாக விளையாடி 62 பதில் 83 உடன் பார்ட்னர்ஷிப் அமைத்து கொல்கத்தா அணியை மீட்டுக் கொண்டு வந்தார்கள். இதில் வெங்கடேஷ் ஐயர் மிகச் சிறப்பாக விளையாடி, பேட்டிங் செய்ய கடினமான ஆடுகளத்தில் 52 பந்தில் 70 ரன்கள் எடுத்தார். கொல்கத்தா 20 ஓவர்களில் 169 ரன்கள் சேர்த்தது.

மும்பை இந்தியன்ஸ் அணி இலக்கை நோக்கி விளையாடிய பொழுது அந்த அணிக்கு சூரிய குமார் யாதவ் தவிர வேறு எந்த பேட்ஸ்மேன்களும் பொறுப்பான பங்களிப்பை கொடுக்கவில்லை. 18.5 ஓவர்களில் அந்த அணி 145 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இறுதியில் கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற வெங்கடேஷ் ஐயர் பேசும் பொழுது “நான் ஒரு தொழில் முறை கிரிக்கெட் வீரராக எல்லா இடங்களிலும் விளையாட தயாராக இருக்க வேண்டும். நான் பந்தை அடித்து விளையாட ஆரம்பித்த நேரம் இரண்டு விக்கெட்டுகள் விழுந்தது. இதன் காரணமாக நான் ஆங்கர் ரோல் செய்ய வேண்டும் என முடிவுக்கு வந்தேன். இன்று நான்காவது ஐந்தாவது முறையாக மணிஷ் பாண்டே பேட் கட்டி பேட்டிங் வாய்ப்புக்காக காத்திருந்தார். இந்த முறை அவருக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. ரமன் டீப் மற்றும் ரசலுக்கு பதிலாக மணிஷ் பாண்டே வருவது நல்ல முடிவு.

- Advertisement -

இதையும் படிங்க : என்னால இப்ப கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது.. அதுக்கு நிறைய நேரம் எடுக்கும் – ஹர்திக் பாண்டியா பேட்டி

ஆடுகளத்தில் பந்து கொஞ்சம் பிடித்து நின்று வந்தது. இது இரட்டை வேகம் கொண்ட ஆடுகளமாக இருந்தது. என்னால் வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் பியூஸ் சாவ்லாவை பின் தொடர்ந்து நன்றாக விளையாட முடியும் என்று நினைத்தேன். நான் கங்குலியின் மிகப்பெரிய ரசிகன். என்னுடைய பேட்டிங் ஸ்டேன்ஸ், பேட்டிங் தொழில் நுட்பங்கள் குறித்து அவருடன் உரையாடுவதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அது எனக்கு பெரிய பயனுள்ளதாக இருக்கிறது. அவர் சொன்ன அறிவுரைகள்தான் எனக்கு வலை பயிற்சியில் இருந்து வருகிறது” என்று கூறி இருக்கிறார்.