சர்ப்ராஸ் கான் பேச்சை கேட்காத ரோகித்.. குல்தீப்பால் வந்த பிரச்சனை.. என்ன நடந்தது

0
706
Rohit

தற்போது தரம்சாலா மைதானத்தில் இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில், வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான சூழ்நிலையில் இந்திய அணிக்கு அதிர்ஷ்டம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது.

இன்றைய போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து கேப்டன் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். தரம்சாலா சூழ்நிலையில் பந்து நன்றாக ஸ்விங் ஆனது.

- Advertisement -

இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பான பந்துகளை தொடர்ந்து வீசியபோதிலும் கூட, அது அவுட் ஆக மாறுவதற்கான அதிர்ஷ்டம் இந்திய அணிக்கு கிடைக்கவில்லை. இங்கிலாந்து துவக்க ஆட்டக்காரர்கள் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் கடந்தார்கள்.

இதற்கு அடுத்து பந்துவீச்சுக்கு வந்த குல்தீப் யாதவ் பென் டக்கெட் 27, ஒல்லி போப் 11 என முதல் செஷனில் இருவரது விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். ஆனால் யாருக்கும் வெற்றி தோல்வி இல்லாமல் முதல் செஷன் முடிந்தது.

- Advertisement -

இந்த நிலையில் மதிய உணவு இடைவேளை முடிந்து மீண்டும் திரும்ப வந்த இந்திய அணிக்கு அரை சதம் அடித்திருந்த ஜாக் கிரவுலி விக்கெட்டை கைப்பற்றுவதற்கு சிறந்த வாய்ப்பு கிடைத்தது.

குல்தீப் யாதவ் பந்துவீச்சில் ஷார்ட் லெக்கில் நின்ற சர்பராஸ் கான் ஜாக் கிரவுலி பேட்டை தட்டிய பந்தை கேட்ச் பிடித்தார். இதற்கு அம்பயர் அவுட் தரவில்லை. இதைத்தொடர்ந்து மூன்றாவது அம்பயர் இடம் செல்வதற்கு சர்பராஸ் கான் கேப்டன் ரோஹித் சர்மாவை வற்புறுத்தினார்.

இதையும் படிங்க : மீண்டும் வசமாக சிக்கிய ஸ்டோக்ஸ்.. வறுத்தெடுக்கும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்.. என்ன நடந்தது

இதற்கு முன்பாக இதே போல் குல்தீப் யாதவ் ரோகித் சர்மாவை வற்புறுத்தி எடுக்க வைத்த ரிவ்யூ வீணாக சென்றது. இதன் காரணமாக ரோகித் சர்மா ரிவ்யூ இழக்கக்கூடாது என்று சர்பராஸ் கான் பேச்சை கேட்கவில்லை. கடைசியில் ரீப்ளேவில் பார்த்த பொழுது பந்து பேட்டில் பட்டது தெளிவாக தெரிந்தது. இந்திய அணி இக்கட்டான நிலையில் ஜாக் கிரௌலி விக்கட்டை பரிதாபமாக இழந்துவிட்டது.

- Advertisement -