நான் இந்திய செலக்டரா இருந்திருந்தா கதையே வேற .. சாம்சனுக்கு ஆதரவாக பீட்டர்சன் தைரிய பேச்சு

0
543
Samson

நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் மிகச்சிறப்பாக எல்லா பொறுப்புகளிலும் செயல்பட்டு வருகிறார். எனவே அவரை டி20 உலகக்கோப்பையில் விக்கெட் கீப்பராக தேர்வு செய்ய வேண்டும் என பலரும் கூறி வருகிறார்கள். இந்த நிலையில் கெவின் பீட்டர்சன் சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக பேசியிருக்கிறார்.

இன்று லக்னோ அணிக்கு எதிராக ராஜஸ்தான் அணி நெருக்கடியில் இருந்த பொழுது, சஞ்சு சாம்சன் 33 பந்துகளை மட்டுமே சந்தித்து 71 ரன்கள் குவித்து அணியை வெற்றி பெற வைத்து ஆட்ட நாயகன் விருதும் பெற்றார். மேலும் பேட்டிங் ஃபார்மில் இல்லாத ஜூலை சிறப்பாக வழி நடத்தி அவரையும் அரைசதம் அடிக்க வைத்தார்.

- Advertisement -

இந்த ஐபிஎல் தொடரில் விராட் கோலி 9 போட்டிகளில் 430 ரன்கள் எடுத்து முதலிடத்தில் இருக்கிறார். இதற்கு அடுத்து சஞ்சு சாம்சன் 9 போட்டிகளில் 4 முறை நாட் அவுட் ஆகவும் இருந்து, 4 அரை சதங்களுடன் 385 ரன்கள் குவித்து இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இதற்கு அடுத்து இவர்களைப் போலவே 9 போட்டிகளில் கேஎல்.ராகுல் 378 ரன்கள் எடுத்து மூன்றாவது இடத்திலும், ரிஷப் பண்ட் 10 போட்டிகளில் 371 ரன்களும் எடுத்து மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் இருக்கிறார்கள்.

நடக்க இருக்கும் டி20 உலக கோப்பையில் ரிஷப் பண்ட் இடம் உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஏனென்றால் இடதுகை விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாக அவர் மட்டுமே தற்பொழுது முன்னணியில் இருக்கிறார். விபத்தில் சிக்கி காயம் அடைந்து திரும்பி வரும் அவர் பேட்டிங் மட்டுமில்லாமல் விக்கெட் கீப்பிங் சிறப்பாக இருப்பது, அவருடைய தேர்வுக்கு வழிவகுக்கிறது.

- Advertisement -

அதே சமயத்தில் வலதுகை விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன்களாக சஞ்சு சாம்சன் மற்றும் கேஎல்.ராகுல் இருவரும் ஒரே இடத்திற்கு போட்டியிடுகிறார்கள். மேலும் இருவரும் ஒரே மாதிரியான செயல்பாட்டையும் ஐபிஎல் தொடரில் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். எனவே இவர்களில் யாரை தேர்வு செய்வார்கள்? என்பது கேள்வியாக இருந்து வருகிறது.

இதையும் படிங்க : ஐபிஎல்-ல இந்த டீம்தான் ஜெயிக்கும்.. 15வது ஓவர் வரை பிஷ்னாய் வராத காரணம் இதுதான் – கேஎல் ராகுல் விளக்கம்

இந்த நிலையில் கெவின் பீட்டர்சன் பேசும் பொழுது ” நான் இந்திய அணியின் செலக்டராக இருந்திருந்தால், டி20 உலக கோப்பை இந்திய அணிக்கான தேர்வில் முதல் வீரர்களில் ஒருவராக சஞ்சு சாம்சன் இருந்திருப்பார். அவர் டி20 உலகக் கோப்பைக்கு அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டிஸ் செல்லும் விமானத்தில் இருக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -