சாம்சனை தவறா நடத்துனாங்கன்னு சொல்லுவேன்.. அவரை டி20 உ.கோ-க்கு செலக்ட் பண்ண மாட்டீங்களா – ஹர்பஜன் சிங் பேட்டி

0
30
Sanju

நேற்று ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிராக அவர்களது சொந்த மைதானத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெற்றிக்கு கேப்டன் சஞ்சு சாம்சன் முக்கிய காரணமாக இருந்தார். இதன் காரணமாக அவரை டி20 உலகக்கோப்பைக்கு தேர்வு செய்ய வேண்டும் என ஹர்பஜன்சிங் கூறியிருக்கிறார்.

லக்னோ அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் 198 ரன்களை துரத்தும் போது, ராஜஸ்தான் அணி முதல் முக்கிய மூன்று விக்கெட்டுகளை 78 ரன்களுக்கு இழந்துவிட்டது. இந்த நிலையில் துருவ் ஜுரலை வைத்துக் கொண்டு, அவரை சிறப்பாக வழி நடத்தியதோடு, சஞ்சு சாம்சன் அபாரமாக விளையாடி 33 பந்துகளில் 71 ரன்கள் குவித்து அடியை வெற்றி பெற வைத்தார்.

- Advertisement -

தற்போது டி20 உலகக்கோப்பைக்கு விக்கெட் கீப்பர்கள் போட்டியில் ரிஷப் பண்ட் இடதுகை பேட்ஸ்மேனாக இருப்பதால் போட்டியின்றி தேர்வாகி விட்டார் என்பதாகவே இருக்கிறது. எனவே இரண்டாவது விக்கெட் கீப்பருக்கான இடத்திற்கு சஞ்சு சாம்சன் மற்றும் கேஎல்.ராகுல் இருவரும் போட்டியிட்டு வருகிறார்கள்.

நேற்றைய போட்டியில் ஒருபுறம் ரன் அழுத்தம் இருக்கும் நேரத்தில், கேஎல்.ராகுல் தனது அணிக்காக அரை சதம் அடித்திருந்த நிலையில், அணியை வெற்றி பெற வைக்கவும், டி20 உலகக் கோப்பை போட்டியில் நீடிக்கவும் சேர்த்து சஞ்சு சாம்சன் ஒரு மிகச் சிறப்பான இன்னிங்ஸ் ஆட்டம் இழக்காமல் விளையாடியிருக்கிறார். எனவே தற்போது அவருக்கான ஆதரவு பெருகி வருகிறது.

- Advertisement -

இதுகுறித்து ஹர்பஜன் சிங் பேசும் பொழுது ” சஞ்சு சாம்சன் நடப்பு ஐபிஎல் தொடரில் சிறந்த வீரராக இருந்து வருகின்ற காரணத்தினால், அவரை டி20 உலகக்கோப்பை இந்திய அணிக்கு முதல் வீரராக தேர்வு செய்வேன். அவர் சவாலான சூழ்நிலைகளில் சிறப்பாக விளையாடுகிறார். மேலும் அவரது கேப்டன்ஷிப் சிறப்பாக உள்ளது. அவர் எந்த நேரத்திலும் அழுத்தத்தில் இருந்து நான் பார்க்கவில்லை.

இதையும் படிங்க : நான் இந்திய செலக்டரா இருந்திருந்தா கதையே வேற .. சாம்சனுக்கு ஆதரவாக பீட்டர்சன் தைரிய பேச்சு

அவர் ஆக்ரோஷமாகவும் விளையாடுகிறார். தேவைப்படும் பொழுது ஆங்கர் ரோல் செய்யவும் செய்கிறார். தற்பொழுது அவர் முழு நம்பிக்கையுடன் காணப்படுகிறார். எனவே அவரை டி20 உலகக்கோப்பை அணியில் இருந்து வெளியேற்ற முடியாது. தற்போது அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால், அவரை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் தவறாக நடத்தியதாகவே நான் கூறுவேன். தேர்வாளர்கள் அவரை புறக்கணிக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -