ஜாகிர் கானின் டி20 உலககோப்பை இந்திய அணி.. சாம்சனுக்கு இடமில்லை.. ஆர்சிபி வீரருக்கு இடம்

0
648
Zaheer

இந்தியாவில் ஐபிஎல் தொடர் முடிந்ததும், நடப்பு ஆண்டு ஜூன் ஒன்றாம் தேதி முதல் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இதற்கான தனது இந்திய அணியை ஜாகிர் கான் வெளியிட்டு இருக்கிறார்.

ஜாகிர் கானின் டி20 உலகக்கோப்பை இந்திய அணி அறிவிப்பில் மிக முக்கியமாக அவர் தற்போது சிறப்பாக செயல்பட்டு வரும் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சனை சேர்க்கவில்லை. மேலும் ஒரே ஒரு விக்கெட் கீப்பரை மட்டுமே சேர்த்திருக்கிறார். அந்த ஒரு விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டாக இருக்கிறார்.

- Advertisement -

மேலும் ஆச்சரியப்படுத்தும் முடிவாக அவர் ஆர்சிபி அணிக்காக விளையாடும் யாஸ் தயாலை சேர்த்து இருக்கிறார். முகமது சமி இல்லாத காரணத்தினால், கூடுதல் வேகப்பந்துவீச்சாளர் தேவை என்பதால் இவரை அணியில் சேர்த்ததாக தெளிவு படுத்தியும் இருக்கிறார்.

இவர் வெளியிட்டுள்ள அணியில் மொத்தம் 16 வீரர்கள் இடம் பெற்று இருக்கிறார்கள். இதில் ரோகித் சர்மா உடன் சேர்த்து ஜெய்ஸ்வால் மற்றும் கில் இருவருமே தேர்வு செய்திருக்கிறார். இதேபோல் அக்சர் படேலுக்கு இவரது அணியில் இடமில்லை. மேலும் ரவீந்திர ஜடேஜா, சிவம் துபே மற்றும் ஹர்திக் பாண்டியா மூவரையும் ஆல்ரவுண்டர்களாக வைத்திருக்கிறார்.

சுழல் பந்துவீச்சு கூட்டணிக்கு குல்தீப் யாதவ் மற்றும் யுஸ்வேந்திர சாகல் இருவரும் இருக்கிறார்கள். வேகப்பந்துவீச்சாளர்களாக பும்ரா, சிராஜ், யாஸ் தயால் மற்றும் அர்ஸ்தீப் சிங் என நான்கு பேர் வருகிறார்கள். ஒட்டு மொத்தத்தில் இவரது அணிதேர்வில் சஞ்சு சாம்சனுக்கு இடம் இல்லாதது மட்டுமே விமர்சனமாக இருந்து வருகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : சாம்சனை தவறா நடத்துனாங்கன்னு சொல்லுவேன்.. அவரை டி20 உ.கோ-க்கு செலக்ட் பண்ண மாட்டீங்களா – ஹர்பஜன் சிங் பேட்டி

ஜாகிர் கானின் டி20 உலகக்கோப்பை இந்திய அணி :

ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால், கில், விராட் கோலி, சூரியகுமார் யாதவ், ரிங்கு சிங், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, ரிஷப் பண்ட், பும்ரா, சிராஜ், யாஸ் தயால், அர்ஸ்தீப் சிங், குல்தீப் யாதவ் மற்றும் சாகல்.