பும்ரா இல்லை.. இந்த இந்திய பந்துவீச்சாளரை பார்த்தால் எல்லாரும் பயப்படறாங்க – ஜாகிர் கான் பேச்சு

0
4160
Zaheer

நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணிகள் மோதிய போட்டி மிகவும் பரபரப்பாகவும் அதே நேரம் சர்ச்சையான நம்ம முறையிலும் அமைந்தது. இந்த போட்டியில் ஒரு வியப்பான ஐபிஎல் சாதனையை டெல்லி அணியின் ஜாக் பிரேசர் மெக்கர்க் உருவாக்கி இருந்தார். இந்த நிலையில் ஜாகிர் கான் வித்தியாசமான பாராட்டு ஒன்றை கூறியிருக்கிறார்.

நேற்று டெல்லி அணி டாஸ் தோற்று முதலில் தங்களது சொந்த மைதானத்தில் பேட்டிங் செய்யவேண்டியது. வழக்கம்போல் அந்த அணியின் இளம் துவக்க ஆட்டக்காரர் ஜாக் பிரேசர் மெக்கர்க் அதிரடியில் மிரட்ட ஆரம்பித்தார். போல்டின் முதல் ஓவரில் ஒரு பவுண்டரி மட்டுமே அவருக்கு வந்தாலும் கூட அதிரடி அதற்கு அடுத்து தொடர்ந்தது.

- Advertisement -

ஆவேஸ் கான் பந்துவீச்சுக்கு வந்ததும் அவரது ஓவரில் பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் அவர் பறக்க விட்டார். 19 பந்தில் அவருக்கு ஏழு பவுண்டரி மற்றும் மூன்று சிக்ஸர் உடன் அரைசதம் நான்காவது ஓவரின் கடைசிப் பந்தில் வந்துவிட்டது. அவரை எப்படி கட்டுப்படுத்துவது என்றே தெரியவில்லை.

இந்த நிலையில் சஞ்சு சாம்சன் அனுபவம் மிக்க சுழல் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினிடம் சென்றார். அவர் ஐந்தாவது ஓவரின் முதல் பந்தில் அபிஷேக் போரலுக்கு ஒரு ரன் கொடுத்தார். இதற்கு அடுத்து பேட்டிங் வந்த ஜாக் பிரேசருக்கு நேராக ஒரு புல் டாஸ் பந்தை போட்டு ஆச்சரியப்படுத்தினார். பந்தை ஆப் சைடில் அடிக்க தொடர்ந்து முயற்சி செய்த ஜாக் பிரேசர் அந்தப் பந்தையும் அப்படி அடிக்க கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.

நேற்று கேப்டன் சஞ்சு சாம்சன் முக்கியமான நேரத்தில் பந்தை கையில் கொடுக்க பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தித் தந்தார். மீண்டும் இரண்டாவது முறையாக பந்து வீச்சுக்கு வந்த அவர் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்த அபிஷேக் போரல் விக்கெட்டையும் கைப்பற்றினார். நேற்று மொத்தம் நான்கு ஓவர்களில் 24 ரன்கள் மட்டும் தந்து மூன்று விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

இதையும் படிங்க : எங்களுக்கு வேறு கருத்து இருக்கிறது.. ஆனா நாங்க அந்த விஷயத்தை செஞ்சிருக்கனும் – சங்கக்கரா பேட்டி

ரவிச்சந்திரன் அஸ்வின் குறித்து ஜாகிர் கான் பேசும் பொழுது “இந்த அஸ்வினை பார்த்தாலே பேட்ஸ்மேன்கள் பயப்படுகிறார்கள். அவர் சூழ்நிலைக்கு ஏற்ப பந்து வீசினார். மேலும் அவருடைய வேரியேஷன்களை மிகவும் கச்சிதமாக பயன்படுத்தினார். அவர் ராஜஸ்தான் அணியின் சிறந்த பந்துவீச்சாளராக இருந்தார். அவர் டெல்லி அணிக்காகவும் விளையாடியிருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.