எங்களுக்கு வேறு கருத்து இருக்கிறது.. ஆனா நாங்க அந்த விஷயத்தை செஞ்சிருக்கனும் – சங்கக்கரா பேட்டி

0
616
Sangakkara

நேற்று ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டி டெல்லி மைதானத்தில் நடைபெற்றது. ஹை ஸ்கோரிங் போட்டியாகசென்ற இந்த ஆட்டத்தில், சஞ்சு சாம்சனின் அவுட் பெரிய சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது.

நேற்றைய போட்டியில் டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் ஜாக் பிரேசர் 50 மற்றும் அபிஷேக் போரல் 63 ரன்கள் எடுக்க, அந்த அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் தரப்பில் அஸ்வின் 3 விக்கெட் கைப்பற்றி இருந்தார்.

- Advertisement -

இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணிக்கு கடைசி ஐந்து ஓவர்களில் ஒரு ஓவருக்கு 12 ரன்கள் வீதம்தான் தேவைப்பட்டது. ராஜஸ்தான் மூன்று விக்கெட்டுகள் மட்டுமே இழந்திருந்தது. களத்தில் 80 ரன்கள் தாண்டி அடித்த சஞ்சு சாம்சன் இருந்தார். எனவே எப்படியும் ராஜஸ்தான் வெற்றி பெற்று விடும் என எல்லோரும் எதிர்பார்த்தார்கள்.

இந்த நிலையில் சஞ்சு சாம்சன் தூக்கி அடித்த பந்து ஒன்று எல்லைக்கோட்டில் ஷாய் ஹோப் கேட்ச் பிடித்த விதம் மிகவும் சர்ச்சையாக அமைந்தது. போட்டியில் மிக முக்கியமாக அமைந்த அந்த தருணத்தில், மூன்றாவது நடுவர் அதை ஒரே ஒருமுறை மட்டுமே கால் எல்லைக்கோட்டில் பட்டதா என சரி பார்த்தார். இரண்டாவது தடவை கேட்டபொழுது அதற்கு நடுவர் சம்மதிக்கவில்லை. இதனால் களத்திலும் களத்திற்கு வெளியிலும் நிறைய விவாதங்கள் சென்றது.

இதுகுறித்து ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளர் சங்கக்கரா கூறும்பொழுது “ரீப்ளே மற்றும் ஆங்கிள்கள் பொறுத்து மூன்றாவது நடுவருக்கு தீர்ப்பளிப்பது கடினமாக இருந்தது. ஆட்டம் முக்கியமான கட்டத்தில் இருந்த நேரத்தில் கிரிக்கெட்டில் இப்படியெல்லாம் நடக்கிறது. எங்களுக்கு வேறு கருத்துக்கள் இருக்கலாம், ஆனால் அதை நடுவர்களுடன் பகிர்ந்துதான் சரி செய்ய முடியும். அதே சமயத்தில் நாங்கள் சஞ்சு சாம்சன் ஆட்டம் இழப்பை பொருட்படுத்தாமல், எங்களுடைய ஆட்டத்தை பார்த்திருக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : தோனியின் பிரம்மாண்ட சாதனையை முறியடித்த சஞ்சு சாம்சன்.. கோலி ரோகித்தால் கூட முடியாத ரெகார்ட்

இதுகுறித்து இங்கிலாந்து முன்னாள் வீரர் பால் காலிங்வுட் கூறும் பொழுது “மூன்றாவது நடுவர் எனக்கு நல்ல நண்பர் எனவே நான் அவரை பாதுகாக்க போகிறேன். ஒருவேளை அவர் தனக்குத்தானே இன்னொரு கோணத்தை கொடுத்து பார்த்திருக்கலாம். என்ன ஒன்று இது இரண்டு முறை சரிபார்த்து இருக்க வேண்டும். ஆட்டம் மிகவும் முக்கியமான கட்டத்தில் இருந்தது. மேலும் இது போட்டியில் பெரியமாற்றத்தை ஏற்படுத்துகின்றன. எனவே இதற்காக இன்னும் கொஞ்சம் நேரம் கொடுத்து இருக்கலாம்” என்று கூறி இருக்கிறார்.