சிஎஸ்கே கேப்டனா வர வேண்டியது நான்தான்.. கடைசில இது நடந்திருச்சு – சேவாக் வெளியிட்ட தகவல்

0
312
Sehwag

ஐபிஎல் தொடர் 2008 ஆம் ஆண்டு ஆரம்பித்து இந்த ஆண்டுடன் 17 ஆண்டுகளாக தொடர்ந்து வெற்றிகரமாக இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்பட்டு வருகிறது. இதில் முதல் சீசனுக்கான ஏலம் குறித்து வீரேந்திர சேவாக் சுவாரசியமான விஷயம் ஒன்றை வெளிப்படுத்தி இருக்கிறார்.

2008 முதல் ஐபிஎல் சீசனுக்கு ஏலம் நடைபெற்ற பொழுது, எட்டு அணிகளுக்கும் ஏலத்திற்குள் வராமலே ஐடியல் வீரரை எடுத்துக் கொள்ளும்விதி இருந்தது. இதன்படி சச்சின் மும்பை, யுவராஜ் சிங் பஞ்சாப், ராகுல் டிராவிட் பெங்களூரு என தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஐடியல் வீரர்களாக யாரும் வரவில்லை. மேலும் தோனியும் ஐடியல் வீரராக செல்ல விரும்பவில்லை. ஏலத்திற்கு சென்றால் ஐடியல் வீரராக செல்வதை விட நிறைய பணம் கிடைக்கும் என, அவர் ஏலத்திற்கு சென்றார். இந்த தகவலை சமீபத்தில் அவரே வெளியிலும் கூறியிருந்தார்.

இப்படியான சூழலில் ஏலத்திற்கு வந்த தோனியை முதல் சீசனுக்கு அதிக விலை கொடுத்து சிஎஸ்கே அணி வாங்கியது. அப்பொழுது அவரே அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரராக ஐபிஎல் தொடரில் இருந்தார். அவருக்கு அடுத்து டெக்கான் சார்ஜர்ஸ் அணி ஆண்ட்ரூ சைமன்சை அதிக விலைக்கு வாங்கி இருந்தது.

தற்பொழுது இது குறித்து பேசி இருக்கும் வீரேந்திர சேவாக் கூறும்பொழுது “விபி. சந்திரசேகர் சிஎஸ்கே அணிக்கான வீரர்களை தேர்வு செய்து கொண்டிருந்தார். அவர் என்னிடம் ‘நீங்கள் சிஎஸ்கே அணிக்காக விளையாட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். எனவே நீங்கள் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் ஐடியல் வீரராக போகக்கூடாது எனக் கேட்டுக்கொண்டார். நானும் அவரிடம் பார்க்கலாம் என்று கூறி இருந்தேன்.

- Advertisement -

இதையும் படிங்க : கோலி ரோகித்.. 2 பேரையும் டி20 உலக கோப்பைக்கு செலக்ட் பண்ணி இருக்க கூடாது – உத்தப்பா கருத்து

இறுதியாக டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் ஐடியல் வீரராக வருவதற்காக வாய்ப்பு வந்தது. நான் அந்த வாய்ப்பை ஏற்றுக் கொண்டேன். நான் ஏலத்திற்கு செல்லவில்லை. ஒருவேளை நான் ஏலத்திற்கு சென்று இருந்தால், சிஎஸ்கே அணி நிர்வாகம் என்னை வாங்கி அந்த அணியின் கேப்டனாக ஆக்கி இருக்கும். அதற்குப் பிறகு அவர்கள் தோனியை வாங்கி கேப்டன் ஆக்கினார்கள்” என்று கூறியிருக்கிறார்.