கோலி ரோகித்.. 2 பேரையும் டி20 உலக கோப்பைக்கு செலக்ட் பண்ணி இருக்க கூடாது – உத்தப்பா கருத்து

0
57
Robin

இந்திய டி20 கிரிக்கெட் அணியில் 14 மாதங்களுக்கும் மேலாக மூத்த வீரர்களான ரோஹித் சர்மா விராட் கோலி மற்றும் கேஎல்ராகுல் போன்றவர்கள் சேர்க்கப்படாமல் இருந்தார்கள். ஆனால் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதுகுறித்து ராபின் உத்தப்பா தனது விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் நிர்வாகம் இந்திய டி20 அணிக்கு ஹர்திக் பாண்டியா தலைமையிலான இளம் வீரர்களைக் கொண்ட அணியை உருவாக்கியது. இந்த நிலையில் திடீரென ஆப்கானிஸ்தான் டி20 தொடருக்கு விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவை கொண்டு வந்தது. மேலும் ரோகித் சர்மாவை கேப்டனாகவும் ஆக்கியது.

- Advertisement -

இந்த நிலையில் டி20 உலகக்கோப்பை இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக தொடர, விராட் கோலியும் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இதன் காரணமாக ரிங்கு சிங், திலக் வர்மா, ருதுராஜ் மற்றும் சுப்மன் கில் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது.

ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் மூத்த வீரர்களாக இருப்பது மட்டுமல்லாமல் பெரிய ரசிகர் கூட்டத்தையும் கொண்டவர்களாக இருக்கிறார்கள். எனவே இந்திய கிரிக்கெட் வாரியம் இதை மையப்படுத்தியே இவர்களை தேர்வு செய்திருக்கிறது என்று வெளியில் விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் இது குறித்து பேசி இருக்கும் ராபின் உத்தப்பா கூறும் பொழுது “கடந்த உலகக்கோப்பையோடு ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் நகர்ந்து இருக்க வேண்டும். இந்த டி20 உலகக்கோப்பையில் இளைஞர்கள் விளையாடியிருக்க வேண்டும். மூத்த வீரர்கள் நிறைய விளையாடி இருக்கிறார்கள். மேலும் இவர்கள் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்பதும் உண்மைதான். ஆனால் இப்போது சிறப்பாக செயல்படும் இளம் வீரர்கள் குறிப்பாக கில் போன்றவர்கள் விளையாட வேண்டும்.

- Advertisement -

இதையும் படிங்க: தோனி இருக்கிறது எங்களுக்கு பிரஷரே கிடையாது.. அது ஹெல்ப்தான் பண்ணும் – ஆர்சிபி ஸ்வப்னில் சிங் பேட்டி

கில் இப்பொழுதே டி20 உலகக்கோப்பை 15 பேர் கொண்ட அணியில் இருக்க வேண்டும். அவருக்கு சொந்த விளையாட்டில் இருக்கும் திறன் மற்றும் அவருக்கு இருக்கும் விளையாட்டு மீதான பசி, மேலும் அவர் சாதிக்க விரும்புவது என்று எல்லாம் மிகப்பெரியது. எனவே இப்படியான இளம் வீரர்கள் மிக உயர்ந்த மட்டத்தில் உலகக்கோப்பைகளில் விளையாட வேண்டும்” எனக் கூறி இருக்கிறார்.