பும்ரா இந்த விஷயத்துக்கு கூச்சப்படறேதே கிடையாது.. அதனாலதான் இவ்வளவு பெரிய ஆளா வந்திருக்காரு – ஜாகிர் கான் பேட்டி

0
17
Bumrah

நடப்பு ஐபிஎல் தொடரில் மொத்தம் ஐந்து போட்டிகளில் விளையாடி 10 விக்கெட்டுகள் கைப்பற்றி, அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களுக்கான ஊதா நிறத் தொப்பியை மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கைப்பற்றி இருக்கிறார். அவர் குறித்து இந்திய முன்னாள் வேகப் பந்துவீச்சு நட்சத்திரம் ஜாகிர் கான் பாராட்டு தெரிவித்திருக்கிறார்.

நேற்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி டாஸ் வென்று முதலில் பந்து வீசியது. மூன்றாவது ஓவருக்கு வந்த பும்ரா உடனடியாக ஆரஞ்சு தொப்பி வைத்திருக்கும் விராட் கோலியை வெளியேற்றினார். இதற்குப் பிறகு மிகச் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த கேப்டன் பாப் டு பிளிசிஸ் என ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். நான்கு ஓவர்களில் அவர் 21 ரன்கள் மட்டுமே விட்டு தந்து, அதில் 13 டாட் பந்துகள் வீசியிருந்தார்.

- Advertisement -

இந்தத் தொடர் முழுக்க அவருடைய பந்துவீச்சு மிக அபாரமாக இருந்து வருகிறது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 277 ரன்கள் எடுத்த போட்டியில், பும்ரா நான்கு ஓவர்கள் பந்து வீசி 36 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தார். அந்தப் போட்டியில் கூட அவர் ஓவருக்கு பத்து ரன்கள் என்கின்ற விகிதத்திற்கு செல்லவில்லை.

முதுகு பகுதியில் ஏற்பட்ட காயத்தில் இருந்து திரும்பி வந்த பும்ரா முன்பிருந்ததை விட மிகச் சிறப்பாக வந்திருக்கிறார் என்று கூற வேண்டும். ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர், தற்பொழுது ஐபிஎல் என அவருடைய பந்து வீச்சு மிகக் கூர்மையாக மாறி இருக்கிறது. காயத்திலிருந்து வெளிவருவதற்கான பயிற்சிகளில் அவர் பந்துவீச்சில் பல மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறார்.

நேற்று ஆட்டநாயகன் விருது பெற்றபோது அவர் கூறும் பொழுது “இந்த வடிவ கிரிக்கெட்டில் பந்துவீச்சாளர்களுக்கு ஈகோ இருக்க கூடாது. நாம் எவ்வளவு வேகமாக வீசக்கூடியவராக இருந்தாலும் கூட ஆடுகளம் என்ன கேட்கிறதோ அதைத்தான் செய்ய வேண்டும், டி20 வடிவத்தில் அதிக திறன்களை வளர்த்துக் கொள்ளாமல் நீடிக்க முடியாது” என்று பல விஷயங்கள் பேசி இருந்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : எப்படி ஆரம்பிச்சா என்ன.. ஹர்திக் பாண்டியா ஆட்டத்தை முடிச்ச விதம் வேற மாதிரி – சச்சின் பாராட்டு

இந்த நிலையில் சிறப்பு குறித்து பேசி இருக்கும் ஜாகிர் கான் கூறும் பொழுது “அவர் யார்கர்களை எக்ஸிக்யூட் செய்வது, அந்த மெதுவான பந்துகளை வீசுவது, மேலும் சஞ்சய் மஞ்சுரேக்கருடன் பேசியதை வைத்து பார்க்கும் பொழுது அவர் வேகமாக முதிர்ச்சி அடைந்து வருகிறார், மேலும் ஆட்டத்தின் சூழ்நிலையை புரிந்து கொள்வதில் அவர் நேரத்தையும் ஆற்றலையும் செலவிடுகிறார் என்று நம்மால் உணர முடிகிறது. உங்களுக்கு தெரியும் அவர் அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் விளையாடுகிறார். இதன் காரணமாக அவர் நிறைய ஓவர்கள் பந்து வீசுகிறார். இப்படி நிறைய ஓவர்கள் பந்து வீச அவர் கூச்சப்படுவதே கிடையாது. மேலும் தொடர்ந்து பயிற்சி செய்கிறார். இதுவே அவரை மிகச் சிறந்தவராக மாற்றுகிறது” எனக்கூறி இருக்கிறார்