எப்படி ஆரம்பிச்சா என்ன.. ஹர்திக் பாண்டியா ஆட்டத்தை முடிச்ச விதம் வேற மாதிரி – சச்சின் பாராட்டு

0
21
Sachin

நடப்பு 17வது ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியா தலைமையில் முதல் மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்திருந்தது. அந்த அணியைச் சுற்றிலும் நிறைய நெகட்டிவ்வான விஷயங்கள் சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் அந்த அணி திரும்பி வந்து டெல்லி மற்றும் பெங்களூர் அணிகளுக்கு எதிராக வெற்றி பெற்று இருக்கிறது. பெங்களூருக்கு எதிராக வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சச்சின் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

நேற்றைய போட்டியில் மும்பை முதலில் பந்து வீசிய பொழுது, பும்ரா மிகச் சிறப்பாக செயல்பட்டு நான்கு ஓவர்களுக்கு 21 ரன்கள் மட்டுமே தந்து ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார்.. அவருடைய தனிப்பட்ட சிறப்பான பந்துவீச்சின் காரணமாக, பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளத்தில் ஆர்சிபி அணியால் 200 ரன்களை தொட முடியவில்லை. அந்த அணி எட்டு விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் மட்டுமே எடுத்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து மும்பை அணியின் பேட்டிங்கில் சமீபத்தில் பெரிய ரன்கள் எடுக்க முடியாமல் தடுமாறி வந்த விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் இஷான் கிஷான் அதிரடியாக விளையாடி 34 பந்துகளில் 69 ரன்கள் குவித்தார். அவர் கொஞ்சம் நேரம் எடுத்து விளையாடி ரன்கள் அடிக்கும் பக்குவத்திற்கு வந்திருக்கிறார். இது அந்த அணிக்கு ஒரு நல்ல விஷயமாக அமைந்திருக்கிறது.

மேலும் காயத்தின் காரணமாக முதல் மூன்று போட்டிகளில் விளையாடாத சூரியகுமார் கடந்த போட்டியில் ரன் இல்லாமல் ஆட்டம் இழந்து இருந்தார். இந்த நிலையில் நேற்றைய போட்டியில் அவர் வெறும் 17 பந்தில் அரைசதம் அடித்து, 19 பந்தில் மொத்தமாக 52 ரன்கள் எடுத்தார். சூரியகுமார் யாதவ் உடனடியாக ஃபார்முக்கு வந்ததும் அந்த அணிக்கு பலம் சேர்க்கும் விஷயம்.

மைதானத்தில் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக ரசிகர்கள் நடந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில், அவர் நேற்று உள்ளே வந்த முதல் பந்தையே சிக்ஸருக்கு அடித்தார். மேலும் வெற்றிக்குத் தேவையான ரன்னை வித்தியாசமான முறையில் சிக்ஸருக்கு அடித்து எடுத்து அசத்தினார். அவருடைய மனநிலை வெளியில் இருக்கும் விஷயங்களால் பாதிப்படையவில்லை என்பதை இது காட்டியது.

- Advertisement -

இதையும் படிங்க : ரசிகர்கள் எதிரா கத்துறது ஹர்திக் பாண்டியாவுக்கு ஜாலியாதான் இருக்கு.. அவர் எப்படிபட்ட ஆள் தெரியுமா? – இஷான் கிஷான் பேச்சு

எனவே நேற்றைய வெற்றி மும்பை அணியின் மென்டர் சச்சின் டெண்டுல்கரை அதிக மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது. இதுகுறித்து ட்வீட் செய்துள்ள சச்சின் ” ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் முதலில் தோல்விகளுக்கு பிறகு இப்போது இரண்டு வெற்றிகள் சிறப்பானது. பும்ரா பரபரப்பாக செயல்பட்டார். அவர் ஏன் சிறந்தவர் என்பதை காட்டினார். ரன் ரேட் தேவையான நிலையில் காயத்தில் இருந்து வந்த சூரியகுமார் அபாரமாக விளையாடியிருக்கிறார். அவர் மீண்டும் அணியில் இணைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ஹர்திக் பாண்டியா ஆட்டத்தை ஸ்டைலாக முடித்தது கேக் மீது ஐசிங் போல என” கூறியிருக்கிறார்.