இங்கிலாந்தில் சமீபத்தில் நடைபெற்ற முன்னாள் வீரர்களின் லெஜெண்ட்ஸ் டி20 தொடரில் இந்திய வீரர்கள் விலகியது குறித்து ஷாஹித் அப்ரிடி சர்ச்சையான கருத்து தெரிவித்து இருந்தார். இதற்கு யுவராஜ் சிங் தந்தை ஆச்சரியப்படும் விதமான எதிர் கருத்தை தெரிவித்திருக்கிறார்.
இந்தியா பாகிஸ்தான் இரு நாடுகளுக்கு இடையே பதட்டம் நிலவி வருகின்ற காரணத்தினால் ஆசியக் கோப்பை தொடரில் இரு அணிகளும் விளையாட கூடாது என இந்திய முன்னால் வீரர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்கள். லெஜெண்ட்ஸ் டி20 தொடரிலும் இந்திய முன்னாள் வீரர்கள் அரையிறுதியில் விளையாடாமல் வெளியேறினார்கள்.
மோசமான முட்டை
இந்த நிலையில் இந்திய முன்னாள் வீரர்கள் லெஜெண்ட்ஸ் தொடரில் இருந்து வெளியேறியது குறித்து ஷாஹித் அப்ரிடி ஷிகர் தவானை மோசமான முட்டை என்று விமர்சனம் செய்தார். மேலும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியை விளையாடாமல் இருப்பதன் மூலம் இந்திய மக்களின் கோபத்திற்கு உள்ளாகாமல் இருக்கலாம் என்று திட்டமிட்டதாகவும் கூறினார்.
மேலும் இர்பான் பதான் போன்ற இந்திய முன்னாள் வீரர்கள் பிறந்ததிலிருந்து தாங்கள் இந்தியர் என்பதை நிரூபித்துக் கொள்வதற்கு இப்படி தேவையில்லாமல் எதையாவது செய்வதாகவும், ஆனால் தற்போது ஆசியக் கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கு வர்ணனை செய்ய வந்திருப்பதாகவும் ஷாஹித் அப்ரிடி விமர்சனம் செய்திருந்தார்.
யோக்ராஜ் சிங் தந்த ஆச்சரிய பதில்
இதுகுறித்து ஆச்சரியம் அளிக்கும் விதமாக பெருந்தன்மையாக பேசி உள்ள யோக்ராஜ் சிங் கூறும் பொழுது “நாக்கு மிகவும் சக்தி வாய்ந்தது. எனவே கவனமாக பேசுங்கள். உங்கள் வார்த்தைகளை அளந்து பேசுங்கள். எப்போதும் உண்மையை பேசுங்கள். தைரியமாக இருங்கள். தவறு நடந்தால் தவறு என்றும், நல்லது செய்தால் நல்லது என்றும் சொல்லுங்கள்”
இதையும் படிங்க : என் அப்பாவுக்கு இந்த விஷயத்துக்காகவே நான் நன்றி உள்ளவனா இருக்கணும் – சுப்மான் கில் உணர்ச்சி பேட்டி
“மேலும் இந்தியா பாகிஸ்தான் என அனைவரும் என்னுடைய சொந்தக்காரர்கள். எனவே பிரச்சினைகளை விளையாட்டில் இருந்து ஒதுக்கி வைக்கவும். அரசியல் அல்லது அதிகார விஷயங்களில் தலையிடாமல் இருக்கவும். தேவையில்லாத கருத்துக்களை ஏன் கூற வேண்டும்? இதைத் தவிர்த்து விடுங்கள்” என்று கூறியிருக்கிறார்.






