என் அப்பாவுக்கு இந்த விஷயத்துக்காகவே நான் நன்றி உள்ளவனா இருக்கணும் – சுப்மான் கில் உணர்ச்சி பேட்டி

0
13

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்த சுப்மான் கில் தற்போது இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் ஆகவும் டி20 அணியின் துணை கேப்டன் ஆகவும் திகழ்கிறார்.

இந்த சூழ்நிலையில் கிரிக்கெட்டின் ஆரம்ப காலகட்டத்தில் தனது தந்தை எந்த அளவுக்கு உதவியாக இருந்தார் என்று சில உணர்வுபூர்வமான விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

இந்திய அண்டர் 19 அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மான் கில் அதற்குப் பிறகு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக அறிமுகம் ஆகி விளையாட ஆரம்பித்தார். அந்த அணியில் அவர் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் அதற்குப் பிறகு குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக மாறினார். குஜராத் அணிக்கு மாறிய பின்னர் முழு நேர கிரிக்கெட் ஆக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தார்.

அப்போதே அவர் இந்திய அணியில் இடம் பிடித்து, அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில் தற்போது நிரந்தர டெஸ்ட் கேப்டன் ஆகவும், டி20 அணியின் துணை கேப்டன் ஆகவும் திகழும் நிலையில், தனது கிரிக்கெட்டின் ஆரம்ப காலகட்டத்தில் தனது தந்தை எவ்வாறு உறுதுணையாகவும் உதவியாகவும் இருந்தார் என்று சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் போது “எனது கிரிக்கெட்டின் ஆரம்ப காலகட்டத்தில் எனது அப்பாவுக்கு அந்த அகாடமி பயிற்சியாளரோடு சிறுவித மோதல் ஏற்பட்டது. அவர் எங்களை அகாடமியில் இருந்து வெளியேற்றினார். அது ஒரு தனியார் அகாடமி கிடையாது, அது ஒரு பொதுவான அகடமி ஆகும். பயிற்சியாளர் காலை 6:00 மணி முதல் 10:00 மணி வரையிலும் அதற்கு பின்னர் மாலை 4 முதல் 6 மணி வரையிலும் தனது அமர்வுகளை நடத்துவார்.

இதையும் படிங்க:துலீப் கோப்பை பைனல்.. ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார் மெர்சல் ஆட்டம்.. சென்ட்ரல் ஸோன் அபாரம்

எனவே எனது அப்பா என்னை 3:00 மணிக்கு எழுப்பி மூன்று மணி முதல் 6 மணி வரை பயிற்சி பெற வைத்தார். நான் அந்த 3 மணி நேரம் முயற்சி செய்து 6 மணிக்கு மேல் பள்ளிக்குச் செல்வேன். அதற்குப் பின்னர் பயிற்சியாளர் 11 மணி வரை முடிக்கும் வரை நான் பயிற்சி எடுத்துக் கொள்வேன். நாங்கள் அதை 2 வருடங்களாக செய்தோம். அப்போது எனக்கு எந்த விதமான மோசமான நிகழ்வும் கிடையாது. தொடர்ந்து 3 மணிக்கு எழுந்திருப்பது பெரிய சவாலாக இருக்கும். ஒரு குழந்தையாக நீங்கள் அதை விரும்ப மாட்டீர்கள், ஆனால் எனது அப்பா என்னை தொடர்ந்து மூன்று மணிக்கு எழுப்பி என்னை பயிற்சி பெற வைத்தார். அதனால்தான் நான் இப்போது இந்த நிலைமையில் இருக்கிறேன் அவருக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்க வேண்டும்” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -