துலீப் டிராஃபி ஃபைனல் போட்டியில் சவுத் ஜோன் அணிக்கு எதிராக கேப்டன் இஷான் கிஷானை டிஆர்எஸ் ரிவியூ எடுக்க வைத்து விக்கெட் பெற வைத்த இளம் வீரர் வைபவ் சூர்யவன்சியின் திறமையை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
ஈஸ்ட் ஜோன் அணி முதல் இன்னிங்ஸில் 708 ரன்கள் குவித்து இமாலய இலக்கை நிர்ணயித்தது. இதைத் தொடர்ந்து விளையாடத் தொடங்கிய சவுத் ஜோன் அணியின் ஓப்பனர் ரிக்கி புய் பேட்டிங் செய்தபோது பந்து விக்கெட் கீப்பரிடம் சென்றது.
அப்போது நடுவர் அவுட் தர மறுத்ததால் ஸ்லிப்பில் நின்ற வைபவ் சூர்யவன்சி உடனே கேப்டன் இஷான் கிஷானிடம் சென்று ரிவியூ எடுக்குமாறு வலியுறுத்தினார். அல்ட்ரா எட்ஜ் சோதனையில் பந்து பேட்டில் பட்டது உறுதி செய்யப்பட்டு அவுட் வழங்கப்பட்டது.
இதுகுறித்து நேரலை கமெண்டேட்டர்கள் பேசும்போது “குமார் குஷாக்ரா ஒரு அருமையான கேட்ச் பிடித்தார். ஆனால் நீங்கள் ரிவியூ எடுக்க வேண்டும் என்றால் முதலில் வைபவ் சூர்யவன்சி என்ன சொல்கிறார் என்று கேட்க வேண்டும். ஸ்டம்ப் மைக்கில் வைபவ் இஷான் கிஷானிடம் நான் சொல்கிறேன் ரிவியூ எடுங்கள் என்று கூறுவது கேட்டது. முகேஷ் குமார் வைபவ் சூர்யவன்சிக்கு தேங்க்ஸ் சொல்ல வேண்டும், அவரால் தான் இந்த விக்கெட் கிடைத்தது” என்று கூறி இருக்கிறார்கள்.
இந்த மேட்ச்சில் ஈஸ்ட் ஜோன் கேப்டன் இஷான் கிஷான் மாஸ் பேட்டிங் செய்து 270 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.






