பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் கோச்சாக இருந்த முன்னாள் ஆஸ்திரேலியா ஃபாஸ்ட் பௌலர் ஜேசன் கில்லெஸ்பி, பிசிபி நிர்வாகம் தனக்கு இன்னும் ஆயிரக்கணக்கான டாலர்கள் சம்பள பாக்கி வைத்திருப்பதாக குற்றம்சாட்டி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.
பிசிபி தேர்வுக்குழுவில் அஃகிப் ஜாவேத் நுழைந்த பிறகு தனது உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டதாக அவர் கூறினார். இதன் காரணமாக பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகியதாக அவர் தெரிவித்தார்.
மேலும் இந்த விவகாரத்தில் அஃகிப் ஜாவேத் தொடர்ந்து தனக்கு எதிராக பேசி வந்தால் அவர் மீது லீகல் ஆக்சன் எடுக்கப்போவதாகவும் ஜேசன் கில்லெஸ்பி எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து ஜேசன் கில்லெஸ்பி பேசும்போது “நான் டெஸ்ட் டீமை நிர்வகிப்பது, பிளேயர்கள் மற்றும் ஸ்டாப்களை கவனிப்பது மற்றும் செலக்சன் ரோல் வரை அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்தேன். ஆனால் திடீரென்று எனக்கு எந்த ரோலும் இல்லாமல் போய்விட்டது. இந்த ஒட்டுமொத்த எக்ஸ்பீரியன்ஸும் என்னை மிகவும் அப்செட் ஆக்கிவிட்டது, இதனால் கோச்சிங் செய்வதை விட்டே விலகிவிடலாம் என்று தோன்றியது” என்று கூறி இருக்கிறார்.
மேலும் பிசிபி மற்றும் அஃகிப் ஜாவேத் குறித்து அவர் பேசும்போது “பிசிபி எனக்கு இன்னும் ஆயிரக்கணக்கான டாலர்கள் பாக்கி வைத்திருக்கிறது. நான் எதற்கும் யெஸ்-மேனாக இருக்க விரும்பவில்லை. அஃகிப் ஜாவேத் எனக்கு பின்னால் தொடர்ந்து நெகட்டிவாக பேசி வருகிறார். அவர் தொடர்ந்து இப்படி பேசினால் நான் லீகல் ஆக்சன் எடுப்பது குறித்து பரிசீலிப்பேன். அவர்தான் அனைத்து பிரச்சனைக்கும் காரணம்” என்று கூறி இருக்கிறார்.






