சொல்லியும் கேட்கல.. அபிஷேக் சர்மாவுக்கு இரண்டாவது எச்சரிக்கை கொடுத்த யுவராஜ் சிங்.. என்ன நடந்தது?

0
722
Yuvraj

நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனது பழைய கேப்டன் தென் ஆப்பிரிக்காவின் எய்டன் மார்க்ரம்மை நீக்கிவிட்டு, அவருடைய இடத்திற்கு ஆஸ்திரேலியாவின் கேப்டன் பாட் கம்மின்சை கொண்டு வந்தது. இந்த நிலையில் அந்த அணிக்கு இந்தியாவின் இளம் வீரர் அபிஷேக் ஷர்மா அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார். அதே சமயத்தில் அவருக்கு தனது இரண்டாவது எச்சரிக்கையை யுவராஜ் சிங் அனுப்பி இருக்கிறார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் அபிஷேக் ஷர்மாவின் பேட்டிங் மிகவும் அதிரடியாக இருந்து வருகிறது. மும்பை இந்தியன் அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 277 ரன்கள் குவித்த போட்டியில், அபிஷேக் ஷர்மா மூன்றாவது பேட்ஸ்மேனாக வந்து 23 பந்துகளில் மூன்று பவுண்டரிகள் மற்றும் ஏழு சிக்ஸர்கள் உடன் 63 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

இதேபோல நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் துவக்க வீரராக வந்து வெறும் 12 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் 37 ரன்கள் அடித்து நொறுக்கினார். மேலும் இந்த போட்டியிலும் இவரே ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இந்திய உள்நாட்டு வெள்ளைப்பந்து தொடர்களில் அபிஷேக் ஷர்மாவின் பேட்டிங் ஃபார்ம் மிகவும் சிறப்பாக இருந்து வந்தது. அங்கிருந்து அப்படியே அந்த பேட்டிங் ஃபார்மை ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு மாற்றியிருக்கிறார். மேலும் முன்பு போல் இல்லாமல் பதட்டமில்லாமல் ஷார்ட் செலெக்ஷனை மிகவும் துல்லியமாக வைத்திருக்கிறார். இதனால் பந்துகள் அனாயசமாக பவுண்டரிகளுக்கு பறக்கிறது.

இவர் பஞ்சாப்பை சேர்ந்தவர் என்பது மட்டும் இல்லாமல், இவர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங்கிடம் பயிற்சி பெறுபவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக யுவராஜ் சிங் உடன் இவருக்கு நெருங்கிய நட்பு இருந்து வருகிறது. அவர் இவரை வழிநடத்தும் ஒரு மெண்டர் போல இருக்கிறார். இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடி தவறான சாட் ஆடி ஆட்டம் இழந்து விட்டார். இதற்கு நகைச்சுவையான முறையில் செருப்பு ஸ்டிக்கர் போட்டு யுவராஜ் சிங் எச்சரிக்கை செய்திருந்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : நல்லதுக்காக சொல்றேன்.. அகர்கர் ரோகித் இந்த இந்திய பையன அவசரப்படுத்தாதிங்க – சேன் வாட்சன் பேச்சு.

இந்த நிலையில் நேற்று அதிரடியாக விளையாடி ஆனால் ஒரு தவறான ஷார்ட் செலெக்ஷன் மூலமாக ஆட்டம் இழந்து விட்டார். இதன் காரணமாக அவரால் பெரிய ஸ்கோருக்கு செல்ல முடியவில்லை. இந்த ஆட்டம் குறித்து யுவராஜ் சிங் ட்விட்டரில் “நான் உங்களுக்கு பின்னால் எப்பொழுதும் இருக்கிறேன் பையனே! மீண்டும் ஒரு முறை நன்றாக விளையாடினீர்கள். ஆனால் மீண்டும் ஒரு தவறான ஷாட் காரணமாக ஆட்டம் இழந்து விட்டீர்கள்” என்று மீண்டும் தவறான ஷார்ட்டுக்காக தனது இரண்டாவது எச்சரிக்கையை அனுப்பி இருக்கிறார். நேற்று தன் ஆட்டம் மேம்பட்டதற்கு யுவராஜ் சிங்குக்கு அபிஷேக் ஷர்மா நன்றி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.