நல்லதுக்காக சொல்றேன்.. அகர்கர் ரோகித் இந்த இந்திய பையன அவசரப்படுத்தாதிங்க – சேன் வாட்சன் பேச்சு.

0
140
Watson

தற்பொழுது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் உலக கிரிக்கெட் கவனத்தைக் கவர்ந்தவராக, லக்னோ படிக்காத விளையாடும் டெல்லியைச் சேர்ந்த 21 வயது வலது கை வேகப்பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் உருவாகி இருக்கிறார். இவரை அடுத்து ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கு கொண்டு வர வேண்டும் என பலரும் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இது தவறாக அமையும் என்று ஆஸ்திரேலியாவின் சேன் வாட்சன் கூறியிருக்கிறார்.

நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுவதோடு, மிகவும் கட்டுப்பாட்டுடனும் துல்லியமாகவும் வீசக்கூடியவராக மயங்க் யாதவ் இருந்து வருகிறார். அவருக்கு இருக்கும் வேகத்திற்கு அவரிடம் இருக்கும் கட்டுப்பாடுதான் எல்லோரையும் ஆச்சரியப்படுத்தக் கூடியதாக இருக்கிறது.

- Advertisement -

லக்னோ அணிக்காக பஞ்சாப் அணிக்கு எதிராக ஐபிஎல் தொடரில் அறிமுகமான அவர் அந்த போட்டியிலும் அதற்கு அடுத்து பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியிலும், சிறப்பான பந்துவீச்சின் மூலம் ஆட்டநாயகன் விருதை வென்றார். சொல்லப்போனால் அந்த இரண்டு ஆட்டத்தையும் லக்னோ அணிக்கு தனி வீரராக வென்று தந்தார் எனலாம்.

இந்த நிலையில் மயங்கி யாதவ் குறித்து பேசி இருக்கும் சேன் வாட்சன் “லக்னோ அணி அவரைப் பெற்றிருப்பது மிகவும் அதிர்ஷ்டகரமான ஒன்று. அவரைப் போன்ற ஒருவரை யாரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட எதிர்பார்ப்பார்கள். ஆனால் ஒரு வேகப்பந்துவீச்சாளராக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவது எவ்வளவு கடினமானது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். முதலில் அதற்கு உடலை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்தியாவில் தட்டையான ஆடுகளத்தில் ஒரு நாளைக்கு 10 முதல் 15 ஓவர்கள் இதே வேகத்தில் வீச வேண்டியதாக இருக்கும். இது மிகவும் கடினமான ஒன்று. எனவே என்னை பொறுத்தவரையில் அவரை எடுத்ததும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தள்ளக்கூடாது. அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

- Advertisement -

இதையும் படிங்க : டி20 உலக கோப்பைக்கு வித்தியாசமாக தயாராகும் பாகிஸ்தான்.. இந்திய அணிக்கு காத்திருக்கும் பெரிய சவால்

மயங்க் தவை டெஸ்ட் கிரிக்கெட்டில் கொண்டு வருவதற்கு முன்பாக சிறிது காலம் வெள்ளைப்பந்து கிரிக்கெட் வடிவங்களில் விளையாட வைக்க வேண்டும். அதன் மூலம் அவரது உடல் தேவையான அளவுக்கு பந்து வீசுவதற்கு பழகிக் கொள்ளும். பின்பு அவரை பொறுமையாக டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு கொண்டு வருவது சரியாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.