நடப்பு ஐபிஎல் தொடரில் இரண்டாம் பாதியில் ஆர்சிபி அணியின் எழுச்சி எல்லோரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் ஆர்சி பி அணி நான்கு வீரர்களை தக்க வைக்க வேண்டும் என்றால், கட்டாயம் தக்கவைக்க வேண்டிய ஒரு இந்திய வீரர் குறித்து ஸ்காட் ஸ்டைரிஸ் ஆலோசனை கூறியிருக்கிறார்.
அந்த அணி முதல் 8 போட்டிகளில் 7 போட்டிகளில் தோல்வி அடைந்தது. பிறகு வரிசையாக 5 போட்டிகளை வென்று தற்போது பிளே ஆப் வாய்ப்பில் இருக்கிறது. அந்த அணியின் இந்த முயற்சியில் சில வீரர்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. அவர்கள் திரும்பி வந்து சிறப்பாக செயல்பட்ட காரணத்தினாலே ஆர்சிபி அணி சிறப்பாக செயல்பட ஆரம்பித்தது.
இந்த வகையில் பேட்டிங் யூனிட்டில் ஆரம்பத்தில் இருந்து விராட் கோலி சிறப்பாக செயல்பட்டார். இவரை தவிர்த்து வில் ஜேக்ஸ், ரஜத் பட்டிதார் இருவரும் மிகவும் முக்கியமானவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் செயல்பட்ட விதத்தில் பேட்டிங் யூனிட்டு இருக்கு பெரிய பலம் கிடைத்தது.
அதேபோல பவுலிங் யூனிட்டில் முகமது சிராஜ் மற்றும் யாஸ் தயால் இருவரும் மிகச் சிறப்பாக செயல்பட்டு இருந்தார்கள். மேலும் ஆல்ரவுண்டராக கேமரூன் கிரீன் கணிசமான பங்களிப்பை கொடுத்திருக்கிறார். இப்படி ஒட்டுமொத்தமாக ஒவ்வொரு வீரர்களும் தனி பங்களிப்பை கொடுக்க ஆர்சிபி என்று பிளே ஆப் வாய்ப்பில் நிற்கிறது.
இதுகுறித்து பேசி இருக்கும் ஸ்காட் ஸ்டைரிஸ் கூறும்பொழுது “ரஜத் பட்டிதார் அசுரவேகத்தில் திரும்ப வந்துவிட்டார். அவருக்கு இப்படியான திறமை இருக்கிறது என்று எங்களுக்கு முன்பே தெரியும். நான் ஆர்சிபி அணியின் பொறுப்பாளராக இருந்தால், தக்க வைக்கும் நான்கு வீரர்களில் ஒருவராக அவரை நிச்சயம் தக்க வைப்பேன்.
இதையும் படிங்க : சிஎஸ்கே ஆர்சிபி மேட்ச்.. விராட் கோலிக்கு வாழ்த்து தெரிவித்த சின்ன தல சுரேஷ் ரெய்னா
நான் தக்க வைக்கும் நான்கு வீரர்களில் அவர் ஒருவராக இருப்பார். அவரைச் சுற்றி நிறைய பெரிய பெயர்கள் இருக்கின்றன. ஆனால் தக்க வைக்க வேண்டிய என்னுடைய லிஸ்டில் அவருடைய பெயர் இருக்கும். நான் இது குறித்து எப்படி சொல்வேன் என்றால் ‘உங்களை ஓபன் மார்க்கெட்டில் விட்டு ரிஸ்க் எடுக்க நான் விரும்பவில்லை. நீங்கள் மிகவும் நன்றாக இருக்கிறீர்கள்’ என்று சொல்வேன். மேலும் அவர் வருடத்திற்கு வருடம் சிறப்பாகி கொண்டே வருவார்” என்று நான் நினைக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.