மழையால் நின்ற போட்டி.. ப்ளே ஆஃப்க்கு சென்ற ஹைதராபாத்.. சிஎஸ்கே-வின் 2வது இட வாய்ப்புக்கு சிக்கல்

0
1320
IPL2024

இன்று ஐபிஎல் தொடரில் 66 ஆவது போட்டியில் ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் ஹைதராபாத் மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே நடைபெற இருந்த போட்டி மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் முடித்துக் கொள்ளப்பட்டது. இந்த நிலையில் இது பிளே ஆப் வாய்ப்புகளில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது.

நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் அணி 13 போட்டிகளில் 11 புள்ளிகள் பெற்று, பிளே ஆப் வாய்ப்பை இழந்திருந்தது. மேலும் அந்த அணிக்கு கடந்த போட்டியும் கொல்கத்தா அணியுடன் மழையின் காரணமாக டிரா ஆனது. இந்த நிலையில் அவர்களது கடைசி போட்டியும் இன்று மழையும் காரணமாக டிரா ஆகியிருக்கிறது.

- Advertisement -

ஹைதராபாத் அணி 12 போட்டிகளில் 14 புள்ளிகள் எடுத்து புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் இருந்தது. இன்று 13வது போட்டியில் டிரா மூலமாக ஒரு புள்ளி கிடைத்ததின் காரணமாக, சிஎஸ்கே அணியை மூன்றாவது இடத்தில் இருந்து கீழே இறக்கி மேலே ஏறி இருக்கிறது.

மேலும் இந்த போட்டியில் கிடைத்த ஒரு புள்ளியின் மூலமாக ஹைதராபாத் அணி 15 புள்ளிகள் எடுத்து, நடப்பு ஐபிஎல் தொடரில் மூன்றாவது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று இருக்கிறது. கொல்கத்தா, ராஜஸ்தான், ஹைதராபாத் அணிகள் தற்போது பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி விட்டனர்.

இந்த நிலையில் மே 18ஆம் தேதி ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கும் போட்டியில் சிஎஸ்கே அணி வென்றால் பிளே ஆப் சுற்றில் இருக்கும். அதேபோல் ஆர்சிபி அணி 18 ரன்கள் வித்தியாசத்திலோ அல்லது 11 பந்துகள் மீதம் வைத்து சிஎஸ்கே அணியை வென்றால் பிளே ஆப் சுற்றில் இருக்கும்.

- Advertisement -

இதையும் படிங்க : கோலி இல்ல.. ஆர்சிபி இந்த வீரரை கழட்டி விட்றாதிங்க.. திரும்ப ஏலத்துல கிடைக்க மாட்டார் – ஸ்காட் ஸ்டைரிஸ் அட்வைஸ்

இன்றைய போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக ஹைதராபாத் தோல்வி அடைந்து, தன்னுடைய கடைசி போட்டியில் வென்று அல்லது தோல்வி அடைந்து, இதேபோல் ராஜஸ்தான் தன்னுடைய கடைசி போட்டியில் தோல்வி அடைந்து, சிஎஸ்கே தன்னுடைய கடைசி போட்டியில் ஆர்சிபி அணியை வென்றால் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடிக்க வாய்ப்பு இருந்தது. தற்பொழுதும் இந்த வாய்ப்பு நீடிக்கிறது, ஆனால் இப்பொழுது கட்டாயம் ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் தங்களின் கடைசி போட்டியில் தோற்க வேண்டும். சிஎஸ்கே தங்களின் கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.