“ஹர்திக்கை டீம்ல சேர்த்து இருப்பேன்.. ஆனா கேப்டன் ஆக்கமாட்டேன்.. மாத்துங்க” – யுவராஜ் சிங் பேச்சு

0
171
Hardik

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ரோகித் சர்மா தலைமையிலான இளம் அணி வென்று அசத்தியது. இந்த நிலையில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா அடுத்து ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சென்று இருக்கிறார்.

மேலும் 14 மாதங்கள் கழித்து அவரை டி20 இந்திய அணிக்கு அழைத்ததோடு கேப்டன் ஆகவும் மாற்றப்பட்டார். அதுவரையில் ஹர்திக் பாண்டியா இந்திய டி20 அணியின் கேப்டனாக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கொண்டு நடக்க இருக்கும் டி20 உலக கோப்பையில் இந்திய அணிக்கு ரோகித் சர்மாவே கேப்டனாக இருப்பார் என்றும் பிசிசிஐ தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டது.

- Advertisement -

ஆனால் இதற்கு தலைகீழாக மும்பை இந்தியன்ஸ் அணிகள் முடிவுகள் அமைந்திருக்கிறது. 15 கோடி ரூபாய்க்கு குஜராத் டைட்டன்ஸ் அணியின் வெற்றிகரமான கேப்டனான ஹர்திக் பாண்டியாவை எந்த வீரர்களையும் கொடுக்காமல் விலை கொடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி டிரேடிங் செய்தது. இது குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு பெரிய சங்கடமான சூழ்நிலைகளை உருவாக்கியது.

ஐபிஎல் வட்டாரத்தில் பல சர்ச்சைகளை உருவாக்கிய இந்த முடிவு ஓய்வதற்குள், அடுத்து உடனடியாக ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக கொண்டு வந்தார்கள். இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களும் தங்களது எதிர்ப்பை மறைமுகமாக வெளிப்படுத்த ஆரம்பித்தார்கள்.

இப்படியான நிலையில் ஐபிஎல் தொடர் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், ரசிகர்கள் மீண்டும் கேப்டனாக ரோஹித் சர்மா கொண்டு வரப்பட வேண்டும் என்கின்ற கோரிக்கையை சமூக வலைதளங்களில் பரவலாக முன்வைத்து வருகிறார்கள். அங்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக மும்பை இந்தியன்ஸ் பயிற்சி முகாமில் நுழைந்து, பூஜை எல்லாம் செய்து தயாராகி இருக்கிறார்.

- Advertisement -

நடக்க இருக்கும் ஐபிஎல் தொடரின் மிகப்பெரிய பிரச்சினையாக இது பார்க்கப்படுகிறது. ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டது குறித்து இதுவரை எதுவும் பேசாமல் இருந்து வருகின்ற காரணத்தினால், இந்தப் நாளுக்கு நாள் வீரியம் அதிகமாகிக் கொண்டே செல்கிறது.

இதையும் படிங்க : என்னை யாரும் திட்டாதிங்க.. நான் ஐபிஎல்-ல் விலகியதுக்கு இதான் காரணம் – உருக்கமாக பேசிய ஹாரி புருக்

தற்பொழுது இது குறித்து பேசி இருக்கும் யுவராஜ் சிங் கூறும் பொழுது “ரோகித் சர்மா கேப்டனாக ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்றவர். அவர்கள் ஹர்திக் பாண்டியாவை உள்ளே கொண்டு வந்தது போல நானும் ஏதாவது வீரர்களை கொண்டு வந்து இருப்பேன. ஆனால் கேப்டனாக இன்னும் ஒரு சீசன் ரோஹித் சர்மாவை விட்டு, ஹர்திக் பாண்டியாவை துணை கேப்டனாக வைத்திருப்பேன். இது மொத்தமாக சிறப்பானதாக அமைந்திருக்கும்” என்று கூறி இருக்கிறார்.