என்னை யாரும் திட்டாதிங்க.. நான் ஐபிஎல்-ல் விலகியதுக்கு இதான் காரணம் – உருக்கமாக பேசிய ஹாரி புருக்

0
77
Brook

ஐபிஎல் தொடரில் பெரிய அளவில் சாதிக்க முடியாத அணிகளில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் ஒன்று. இந்த நிலையில் கடந்த வருடம் சாலை விபத்தில் ரிஷப் பண்ட் சிக்கிய காரணத்தினால், அந்த அணி தங்களுடைய விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டனையே இழந்தது. இதன் காரணமாக கடந்த ஐபிஎல் சீசன் அவர்களுக்கு மிக மோசமாக அமைந்தது.

இந்த நிலையில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் மினி ஏலத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிறைய வீரர்களை வெளியேற்றி, விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன்களையும், கடந்த முறை சரியில்லாமல் இருந்த மிடில் ஆர்டர் பேட்டிங்கை பலப்படுத்தவும், சரியான வீரர்களை வாங்கி, அணியை வலிமைப்படுத்தி இருந்தது.

- Advertisement -

குறிப்பாக இங்கிலாந்து அணியின் நட்சத்திர இளம் பேட்ஸ்மேன் ஹரி புருக்கை நான்கு கோடி ரூபாய்க்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் வாங்கியது. மிடில் வரிசையில் அவர் வலிமை கொடுப்பார் என்று நம்பியது. இந்த நிலையில் திடீரென அவர் ஐபிஎல் தொடரில் இந்த வருடம் விளையாடாமல் விலகுவதாக அறிவித்தார். இதன் காரணமாக ஆகாஷ் சோப்ரா போன்ற இந்திய முன்னாள் வீரர்கள், இங்கிலாந்து வீரர்கள் இப்படி தொடரில் இருந்து விலகுவது குறித்து விமர்சனம் செய்திருந்தார்கள்.

தற்பொழுது இதற்கு விளக்கம் அளித்துள்ள ஹாரி புருக் கூறும்பொழுது “வரவிருக்கும் ஐபிஎல் தொடரில் நான் விளையாடுவதில்லை என்கின்ற கடினமான முடிவை எடுத்து இருக்கிறேன். டெல்லி நான் தேர்ந்தெடுக்கப்பட்டதில் மிகவும் உற்சாகமாக இருந்தேன். அந்த அணியினருடன் இணைவதற்கு நான் ஆவலாகவும் இருந்தேன்.

ஆனால் நான் தொடரில் இருந்து விலகும் முடிவை எடுத்திருக்கிறேன். இது குறித்து நான் யாருக்கும் கூற வேண்டியது இல்லை என்றாலும் கூட, இந்த விலகலுக்கு பின்னால் உள்ள காரணங்கள் என்ன என்பது குறித்து தெரிந்து கொள்ள நினைப்பார்கள். அதன் காரணமாக இதற்கு பின்னால் உள்ள உண்மை சூழ்நிலையை நான் விளக்க விரும்புகிறேன்.

- Advertisement -

கடந்த மாதம் நான் என் பாட்டியை இழந்தேன். அவர்கள் என்னுடைய வாழ்க்கைக்கு மிகப்பெரிய பக்கபலமாக இருந்தவர்கள். என் குழந்தைப் பருவத்தில் பெரும் பகுதியை அவர்களது வீட்டில்தான் கழித்தேன். எனது வாழ்க்கை மற்றும் எனது கிரிக்கெட் மீதான காதல் எல்லாமே என் பாட்டியாலும் மறைந்த என் தாத்தாவாலும் வடிவமைக்கப்பட்டது. நான் வீட்டில் இருக்கும் பொழுது அவர்களை பார்க்காமல் ஒரு நாள் கூட இருந்தது கிடையாது.

இந்தியத் தொடருக்கு முன்பாக நாங்கள் அபுதாபியில் இருந்து இந்தியாவுக்கு வருவதற்கு ஒரு நாள் முன்பாக, என் பாட்டிக்கு உடல்நலம் இல்லை என்று நான் இந்திய டெஸ்ட் தொடரில் இருந்து வெளியேறி இங்கிலாந்து சென்றேன். இப்போது என்னுடைய பாட்டி குடும்பத்தை விட்டு சென்று விட்டார். நான் இந்த நேரத்தில் என் குடும்பத்துடன் இருக்க வேண்டும். கடந்த சில வருடங்களாக மனநலம் மற்றும் குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதை பற்றி கற்றுக் கொண்டேன்.

இதையும் படிங்க : ஹர்திக் பாண்டியாவை திட்டி கமெண்ட் செய்த நபர்.. லைக் செய்த முகமது சமி.. என்ன நடந்தது?

உண்மையைச் சொல்வதென்றால் எனக்கு குடும்பத்தை விட வேறு எதுவும் முக்கியம் கிடையாது. இதுசிலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம், ஆனால் எனக்குத் தெரியும் இது சரியான முடிவுதான் என்று. நான்இளமையாக இருக்கிறேன், என்னால் இன்னும் பல ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட முடியும். அதை நான் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். குறிப்பாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்வாகத்திடம் இருந்து கிடைத்த ஆதரவுக்கு நான் மிக நன்றி உள்ளவனாக இருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.