“தம்பிங்களா விட்றாதிங்க.. எதிர்காலத்துக்காக செய்ங்க” – U19 இந்திய அணிக்கு யுவராஜ் சிங் வாழ்த்து

0
211
Yuvraj

ஐசிசி 1988 ஆம் ஆண்டு முதல் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை நடத்தி வருகிறது. 1988 ஆம் வருடம் ஆரம்பித்து அடுத்த பத்து வருடங்கள் பெரிய இடைவெளி இதில் ஏற்பட்டது. இதற்குப் பிறகு 1998 ஆம் ஆண்டு முதல், இரண்டு வருட இடைவெளியில் சீராக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த உலகக் கோப்பைத் தொடர் மொத்தம் 14 சீசன்கள் இதுவரையில் நடைபெற்று முடிந்திருக்கிறது. இதில் அதிகபட்சமாக இந்தியா ஐந்து முறையும், ஆஸ்திரேலியா மூன்று முறையும், பாகிஸ்தான் இரண்டு முறையும் கைப்பற்றி இருக்கின்றன. வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகள் தலா ஒருமுறை கைப்பற்றி இருக்கின்றன.

- Advertisement -

இந்திய அணி முதன் முதலில் 2000 ஆவது ஆண்டு அண்டர் 19 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை கைப்பற்றியது. அப்பொழுது இந்திய அணியில் இருந்து தொடர் நாயகன் விருதை வென்றவர் யுவராஜ் சிங். அதே அணியில் முகமது கைப் இடம் பெற்று இருந்தார்.

இதற்கு அடுத்து இந்திய அணி அடுத்து நான்கு முறை 2008, 2012, 2018 மற்றும் 2022 என மொத்தம் சேர்த்து ஐந்து முறை கோப்பையை கைப்பற்றி இருக்கிறது. மேலும் ஒன்பது முறை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறது. தொடர்ச்சியாக ஐந்து முறை இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்று இருக்கிறது.

இந்த நிலையில் 15ஆவது 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி இன்று ஆஸ்திரேலியா அணியை சந்தித்து விளையாட இருக்கிறது.

- Advertisement -

இந்த இளம் அணியினருக்கு 2000 ஆவது ஆண்டு முதல் முறையாக இந்தியா அண்டர் 19 உலக கோப்பை தொடரை வெல்வதற்கு காரணமாக இருந்து தொடர் நாயகன் விருது பெற்ற யுவராஜ் சிங் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இதையும் படிங்க : “ஆறு மாசத்துல தந்தை தம்பியை இழந்தேன்.. என் கூட யாரும் சேர மாட்டாங்க” – இந்திய டெஸ்ட் அணிக்கு தேர்வான ஆகாஷ் தீப் பேச்சு

அவர் தன்னுடைய வாழ்வில் கூறும் பொழுது “எங்களின் இளம் மற்றும் திறமையான அண்டர் 19 வீரர்கள் இறுதிப் போட்டிக்கு செல்லும் பொழுது, நாங்கள்உங்கள் அனைவரையும் உற்சாகப்படுத்துகிறோம். நீங்கள் முழு மனதுடன் விளையாடுங்கள். உங்களை வெளிப்படுத்துங்கள். உலகக் கோப்பையை வெல்வது என்பது கோப்பையை உயர்த்துவது மட்டும் கிடையாது, அது எதிர்காலத்திற்கான ஒரு மரபை பற்ற வைப்பதும் ஆகும்” எனக் கூறியிருக்கிறார்.