நாங்க நிச்சயம் பிளே ஆஃப்க்கு வருவோம்.. இந்த 2 விஷயத்தை மட்டும் பார்க்க விரும்பறேன் – ஆர்சிபி ஆன்டி பிளவர் பேச்சு

0
14
RCB

நடப்பு ஐபிஎல் தொடரில் நீண்ட நாட்களாக புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தில் ஆர்சிபி அணிதொடர்ந்து இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்று குஜராத் அணிக்கு எதிராக மோதும் போட்டியில் வெற்றி பெற்றால் எட்டாவது இடத்திற்கு முன்னேற முடியும். மேலும் அவர்களுக்கு இன்னும் பிளே ஆப் வாய்ப்பு கொஞ்சம் இருக்கிறது. இதுகுறித்து அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆன்டி பிளவர் பேசியிருக்கிறார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக சேப்பாக்கம் மைதானத்தில் ஆர்சிபி அணி விளையாடியது. அந்த போட்டியில் தோற்ற ஆர்சிபி அணி அதற்கு அடுத்த தங்களது சொந்த மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக வெற்றி பெற்றது. பிறகு தொடர்ச்சியாக ஆர்சிபி அணி ஆறு போட்டிகளில் தோல்வி அடைந்தது.

- Advertisement -

இதன்பிறகு இரண்டு போட்டிகளை வென்று மொத்தம் பத்துப் போட்டிகளில் மூன்று வெற்றிகள் உடன், 6 புள்ளிகள் எடுத்தும் புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்திலேயே தொடர்ந்து இருந்து வருகிறது. இன்று குஜராத் அணிக்கு எதிராக தங்களது சொந்த மைதானத்தில் வெற்றி பெறும் பட்சத்தில், மும்பை அல்லது குஜராத் அணியை பத்தாவது இடத்திற்கு தள்ளி, ஆர்சிபி எட்டாவது இடத்திற்கு வர முடியும்.

மேலும் ஏழு வெற்றிகளுடனும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடிவதற்கான ஒரு சிறிய வாய்ப்பு இந்த அணிக்கு இருக்க செய்கிறது. தற்பொழுது ஓரளவுக்கு சரியான பவுலிங் யூனிட்டும் பேட்டிங் யூனிட்டும் அந்த அணிக்கு கிடைத்திருக்கிறது. எனவே அவர்கள் மீதமிருக்கும் நான்கு போட்டியை வென்று, ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்று நம்புகிறார்கள்.

இந்த ஆண்டு ஆர்சிபி அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளராக வந்திருக்கும் ஆன்டி பிளவர் பேசும் பொழுது “எங்களுடைய பிளே ஆப் நம்பிக்கைகள் இன்னும் உயிருடன் இருக்கிறது. இது சிறந்த நிலையாக கருதுகிறோம். தற்போது புள்ளி பட்டியலில் நாங்கள் இருக்கும் இடத்தை விட இன்னும் மேலே இருக்க விரும்பினோம். ஆனாலும் இன்னும் நம்பிக்கையும் வாய்ப்பும் இருக்கிறது. நாங்கள் ப்ளே ஆப் சுற்றுக்கு வர முடியும் என நம்புகிறோம்.

- Advertisement -

இதையும் படிங்க : இந்தியா நல்ல கிரிக்கெட் நாடு.. ஆனா ஹர்திக் பதிலா இந்த பையனை செலக்ட் பண்ணுங்க – பாக் டேனிஷ் கனேரியா பேட்டி

எங்களுடைய பேட்ஸ்மேன்கள் போட்டிகள் வந்து பேட்டிங் செய்வதற்கு மிகவும் ஆவலுடன் இருப்பார்கள் என்று தெரியும். மேலும் எங்களுடைய ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் தாக்குதல் நடத்துவதை கடந்த ஆட்டங்களில் பார்த்தேன். இந்த விஷயங்களை நான் திரும்பவும் மீண்டும் பார்க்க விரும்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.