இந்தியா நல்ல கிரிக்கெட் நாடு.. ஆனா ஹர்திக் பதிலா இந்த பையனை செலக்ட் பண்ணுங்க – பாக் டேனிஷ் கனேரியா பேட்டி

0
3734
Hardik

இந்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பைக்கு, அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு 15 பேர் கொண்ட இந்திய அணியை சமீபத்தில் வெளியிட்டது. இதில் பெரிய அளவில் விமர்சனத்திற்கு உண்டான பெயர்களாக ரிங்கு சிங் மற்றும் ஹர்திக் பாண்டியா பெயர்கள் இருந்தது. இதுகுறித்து பாகிஸ்தான் வீரர் டேனிஷ் கனேரியா முக்கிய கருத்து ஒன்றைக் கூறியிருக்கிறார்.

டி20 உலக கோப்பைக்கு அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் ரிங்கு சிங் சேர்க்கப்படவில்லை. இந்திய அணிக்காக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் கிடைத்த 15 வாய்ப்புகளில் 300-க்கும் மேற்பட்ட ரண்களை, 89 ஆவரேஜ் மற்றும் 176 ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்திருந்தபொழுதும், டீம் காம்பினேஷன் என்ற பெயரில் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

- Advertisement -

அதே சமயத்தில் டி20 உலகக்கோப்பைக்கு ஹர்திக் பாண்டியா தேர்வு செய்யப்படுவது சந்தேகம் தான் என பலரும் பேசி வந்தார்கள். இப்படியான நிலையில் அவரை தேர்வு செய்தது மட்டும் இல்லாமல், அவருக்கு துணை கேப்டன் பொறுப்பையும் வழங்கியது பெரிய சர்ச்சைக்குரிய முடிவாகப் பார்க்கப்படுகிறது.

தற்பொழுது சுத்தமாக பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் ஃபார்மில் இல்லாத ஹர்திக் பாண்டியா இந்திய அணியில் சேர்க்கப்பட்டிருக்கக் கூடாது எனவும், அந்த இடத்தில் ரிங்கு சிங் சேர்க்கப்பட வேண்டும் எனவும் பலரும் பேசி வருகிறார்கள்.

- Advertisement -

இது குறித்து பேசி இருக்கும் டேனிஷ் கனேரியா கூறும்பொழுது “தரமான கிரிக்கெட் வீரர்களை உருவாக்குவதில் இந்தியாவுக்கு நல்ல பெயர் இருக்கிறது. சமீபத்தில் ஜெய்ஸ்வால் மற்றும் ரகுவன்சி இதற்கு சிறந்த உதாரணம். மயங்க் யாதவ் தன்னுடைய வேகத்தால் அனைவரையும் கவர்ந்திருக்கிறார். மேலும் அபிஷேக் ஷர்மா தன்னுடைய பவர் ஹிட்டிங் திறமையால் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.

இதையும் படிங்க : மும்பை ஒட்டுமொத்த அணியை விசாரித்து கடுமையா நடவடிக்கை எடுக்கனும்.. இதை ஏத்துக்க முடியாது – சேவாக் பேட்டி

ஹர்திக் பாண்டியாவை எடுத்துக் கொண்டால் அவர் தற்போது ஐபிஎல் தொடரில் தனது நிலைத்தன்மையை தவற விட்டு இருக்கிறார். ஏற்கனவே சிவம் துபே இருக்கின்ற காரணத்தினால், ஹர்திக் பாண்டியாவை சேர்க்காமல், ரிங்கு சிங்கை அணியில் சேர்த்து இருந்தால், அவர்கள் இருவரும் மிகச் சிறந்த காம்பினேஷன் ஆக இருந்திருப்பார்கள்” எனத் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -