“ஆறு மாசத்துல தந்தை தம்பியை இழந்தேன்.. என் கூட யாரும் சேர மாட்டாங்க” – இந்திய டெஸ்ட் அணிக்கு தேர்வான ஆகாஷ் தீப் பேச்சு

0
613
Akash

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கு இந்திய அணியில் முதல் வாய்ப்பு ஆகாஷ் தீப்புக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

27 வயதான இந்த வலதுகை வேகப்பந்துவீச்சாளர் பெங்கால் மாநில அணிக்காகவும் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காகவும் விளையாடுகிறார்.

- Advertisement -

தற்பொழுது இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்து அதிகாரப்பூர்வமற்ற மூன்று டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து லயன்ஸ் அணி விளையாடியது.

இந்தத் தொடரில் ஆகாஷ் தீப் பந்துவீச்சு மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது. இதன் காரணமாக அவருக்கு முதல் முறையாக இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆவேஷ் கானை வெளியேற்றி இவரை உள்ளே வைத்திருக்கிறார்கள்.

ஏற்கனவே வெள்ளைப்பந்து இந்திய அணிக்கு தேர்வாகி இன்னும் விளையாடும் வாய்ப்பு கிடைக்காமல் இருக்கிறார். 140 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் வீசும் இவர், கடைசி கட்டத்தில் வந்து சிக்ஸர் அடிக்கும் எபிலிட்டியும் கொண்டிருக்கிறார். எனவே எதிர்காலத்தில் பேட்டிங்கில் சிறிது பங்களிப்பு தரக்கூடிய வேகப்பந்துவீச்சாளராகவும் இவர் வர முடியும்.

- Advertisement -

இவர் தன் சொந்த வாழ்வு பற்றி கூறும் பொழுது “ஆறு மாத இடைவெளியில் என் தந்தையையும் என் தம்பியையும் இழந்தேன். இனி என் வாழ்க்கையில் இழப்பதற்கு என்று பெரிதாக எதுவும் இல்லை. ஆரம்பத்தில் எனது குடும்பத்தை கவனித்துக் கொள்ள வேண்டிய ஒன்றுகள் எனக்கு இருந்தது.

இதன் காரணமாக மாதத்தில் நான் மூன்று அல்லது நான்கு நாட்கள் டென்னிஸ் பந்து கிரிக்கெட் விளையாடுவேன். எனக்கு அதில் ஒரு நாளைக்கு 6000 ரூபாய் கிடைக்கும். இதன் மூலம் எனக்கு மாதம் 20 ஆயிரம் பணம் கிடைக்க அதை வைத்து குடும்பத்தை சமாளித்துக் கொண்டேன்.

நான் கிரிக்கெட் விளையாடிய காலத்தில் என் சொந்த மாநிலம் பீகார் கிரிக்கெட் சங்கம் தடை செய்யப்பட்டிருந்தது. குறிப்பாக நான் பிறந்த இடத்தில் கிரிக்கெட் விளையாடுவது என்பது குற்றமாக பார்க்கப்பட்டது. என்னுடன் மற்றும் குழந்தைகள் சேரக்கூடாது என பெற்றோர்கள் நினைப்பார்கள்.

இதையும் படிங்க : “7-ம் நம்பர் ஜெர்சியை செலக்ட் செய்ய என்ன காரணம்” – தாறுமாறான கிண்டலில் தோனி பதில்

அதில் தவறும் கிடையாது. இப்படியான ஒரு இடத்தில் படிக்காமல் விளையாடி என்ன செய்வது? இந்த கிரிக்கெட் விளையாடி எப்படி சாதிக்கவும் முடியும்?” என்று கூறியிருக்கிறார்.