மும்பை ஒட்டுமொத்த அணியை விசாரித்து கடுமையா நடவடிக்கை எடுக்கனும்.. இதை ஏத்துக்க முடியாது – சேவாக் பேட்டி

0
1528
Hardik

மும்பை இந்தியன்ஸ் அணி நேற்று சொந்த மைதானத்தில் கொல்கத்தா அணிக்கு எதிராக தோற்று பிளே ஆப் வாய்ப்பில் இருந்தும் வெளியேறி இருக்கிறது. இதன் காரணமாக அந்த அணி நிர்வாகம் மற்றும் புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியா மீது சேவாக் கடுமையான விமர்சனங்களை செய்திருக்கிறார்.

நேற்றைய போட்டியில் கொல்கத்தா அணியின் முதல் ஐந்து விக்கெட்டுகளை 57 ரன்களுக்கு வீழ்த்திய பிறகு, அந்த அணியை பேட்டிங் செய்ய கடினமான ஆடுகளத்தில் 170 ரன்கள் விட்டது. மேலும் பேட்டிங் வரிசையில் நிறைய குளறுபடிகளும் இருந்தது. தற்பொழுது இது குறித்து விசாரித்து கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேவாக் பேசியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து சேவாக் கூறும்பொழுது “கேகேஆர் அணி ரசலை நீண்ட நேரம் உள்ளே அனுப்பாமல் வைத்திருந்தது. மும்பை அணியில் டேவிட் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் இதே போல் தாமதமாக வந்தார்கள். இப்படி செய்வதால் என்ன பலன் கிடைத்தது? இவர்கள் யாராலும் இன்றைய போட்டியில் ரன் அடிக்க முடியவில்லை. ஹர்திக் பாண்டியா ஏழாவது இடத்திலும், டேவிட் எட்டாவது இடத்திலும் வருவதால் என்ன பயன்? முன்கூட்டியே வந்தால் இவர்கள் ஆட்டம் இழந்து விடுவார்களா?

ஹர்திக் பாண்டியா குஜராத் கேப்டனாக இருந்த பொழுது பேட்டிங்கில் நான்காவது இடத்தில் வந்தார். அப்பொழுது அவர் சிறப்பாகவே விளையாடினார். தற்பொழுதுஎன்ன நடந்து கொண்டிருக்கிறது? அனுபவம் மிக்க வீரர்கள் ஏன் மிகத் தாமதமாக வருகிறார்கள்? எனக்கு இது குறித்து எதுவுமே புரியவில்லை.

- Advertisement -

நீங்கள் 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு இப்போதே தயாராகிக் கொண்டு இருக்கிறீர்களா? பிளே ஆப் சுற்றுக்கு தகுதி ஆகாத பொழுது, இப்பொழுதே நீங்கள் எதிர்காலத்தைப் பற்றி சிந்திப்பீர்களா? நீங்கள் பேட்டிங் ஆர்டரில் பெரிய அளவில் குழப்பம் அடைந்திருக்கிறீர்கள். இப்படியான குழப்பத்தை வைத்துக்கொண்டு வெற்றி பெறுவது மிகவும் அரிதான ஒன்று.

இதையும் படிங்க : ரோகித் டிராவிட் இந்த விஷயத்துல புத்திசாலிங்க.. ரிங்கு சிங் புதுசா ஆரம்பிக்கனும் – சவுரவ் கங்குலி பேட்டி

இது மிகவும் விசித்திரமாக இருக்கிறது. அணி நிர்வாகம் இது குறித்து விசாரித்து கடுமையான நடவடிக்கைகளை அவர்கள் மேல் எடுக்க வேண்டும். வீரர்கள் ஏன் வித்தியாசமான இடங்களில் பேட்டிங் செய்கிறார்கள் என்பது குறித்து விளக்கப்பட வேண்டும். அணியின் துணை ஊழியர்கள் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர்கள், மேலும் பயிற்சியாளர் மற்றும் கேப்டன் என அனைவரும் அணி உரிமையாளர்களால் விசாரிக்கப்பட வேண்டும்” என்று கூறியிருக்கிறார்

- Advertisement -