பாபர் அசாம் டீம்க்கு யுவராஜ் சிங் கேப்டன்.. மீண்டும் மாஸ் கம்பேக்.. ரசிகர்கள் மகிழ்ச்சி

0
226
Yuvraj

இந்திய கிரிக்கெட்டின் என்றும் சூப்பர் ஸ்டார் ஆன முன்னாள் வீரர் யுவராஜ் சிங் சில நாட்களுக்கு முன்பாக ஏதாவது டி20 லீக் அணிகளுக்கு பயிற்சியாளராக இருப்பதற்கு விருப்பம் தெரிவித்திருந்தார்.

மேலும் எதிர்காலத்தில் இந்திய அணி ஐசிசி தொடர்களில் விளையாடும் பொழுது, இளம் வீரர்களுக்கு அந்த அழுத்தத்தை எப்படி எதிர்கொள்வது என்று பயிற்சி அளிக்க, குறிப்பிட்ட தொடரில் மட்டும் மென்டராக இருப்பதற்கும் விருப்பம் தெரிவித்திருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் அவர் மீண்டும் கிரிக்கெட் வீரராகவே களம் இறங்க இருக்கிறார். அதுவும் ஒரு அணிக்கு கேப்டனாக களம் இறங்க இருக்கிறார். மேலும் அந்த அணியில் பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த பாபர் அசாம் மற்றும் இமாம் உல் ஹக் ஆகியோர் விளையாட இருக்கிறார்கள்.

தற்பொழுது இந்தச் செய்தி இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இடையே பெரிய ஆர்வத்தை தூண்டி இருக்கிறது. யுவராஜ் சிங் லெஜெண்ட் கிரிக்கெட் டிராபி இரண்டாவது சீசனில் நியூயார்க் சூப்பர்ஸ்டார் ஸ்ட்ரைக்கர் அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்க இருக்கிறார்.

இந்த அணியில் பாகிஸ்தானின் பாபர் அசாம் மற்றும் இமாம் உல் ஹக் ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள். மேலும் இவர்களுடன் ரசித் கான், கீரன் பொல்லார்ட், மதிஷா பதிரானா, குர்பாஸ், நசீம் சா, ஆசிப் அலி மற்றும் முகமது அமீர் ஆகியோர் விளையாட இருக்கிறார்கள்.

- Advertisement -

இந்த தொடரின் முதல் போட்டி 20 ஓவர் கொண்ட டி20 வடிவத்தில் நடத்தப்பட்டது. இரண்டாவது சீசன் போட்டியை விறுவிறுப்பாக்குவதற்காக மொத்தம் 90 பந்துகள் கொண்ட 15 ஓவர் போட்டியாக நடத்தப்பட இருக்கிறது.

இந்தத் தொடர் வருகின்ற மார்ச் மாதம் ஏழாம் தேதி துவங்கி 18 ஆம் தேதி வரையில் இலங்கையின் கண்டி மைதானத்தில் நடக்க இருக்கிறது. இந்தத் தொடரின் முதல் சீசன் இந்தியாவில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. முதல் சீசனின் இறுதிப் போட்டி நடத்த முடியாமல் போக, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இந்தூர் நைட்ஸ் மற்றும் கவுகாத்தி அவெஞ்சர்ஸ் இரண்டு அணிகளும் சாம்பியன்களாக அறிவிக்கப்பட்டன.

இதையும் படிங்க : “பாஸ்ட் பவுலிங் பிரச்சனை.. அதனால 2 பேர்ல இந்த பையனுக்கு வாய்ப்பு கொடுங்க” – பிராட் ஹாக் பேச்சு

மேலும் இந்தத் தொடரில் இரண்டாவது சீசனில் ஒரு பந்துவீச்சாளருக்கு மூன்று ஓவர்கள் என 5 பந்துவீச்சாளர்கள்ஒரு அணியில் இருப்பார்கள். பத்து ஓவர்கள் அதாவது 60 பந்துகள் வீசி முடிக்கப்பட்ட பின்னால் ஒரே ஒரு பந்துவீச்சாளருக்கு மட்டும் கேப்டன் நான்காவது ஓவரை கொடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.