“பாஸ்ட் பவுலிங் பிரச்சனை.. அதனால 2 பேர்ல இந்த பையனுக்கு வாய்ப்பு கொடுங்க” – பிராட் ஹாக் பேச்சு

0
151
Hogg

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை துவங்க இருக்கிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் இரு அணிகளும் வெற்றி பெற்று இருக்கின்ற காரணத்தினால், மூன்றாவது போட்டி மிகவும் முக்கியத்துவம் பெற்றதாக அமைகிறது.

இந்திய அணியைப் பொறுத்தவரை கடந்த 10 வருடங்களில் தற்போது அமையப்போகும் அனுபவம் மற்ற டெஸ்ட் பேட்டிங் யூனிட்டை போல வேறு எப்போதும் இருந்தது கிடையாது.

- Advertisement -

நாளைய போட்டியில் இரண்டு வீரர்கள் அறிமுகம் ஆவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரஜத் பட்டிதார் அறிமுகமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஜெய்ஸ்வால் 6 டெஸ்ட் போட்டிகள் மட்டுமே விளையாடி இருக்கிறார். சுப்மன் கில் 20 டெஸ்டுகள் மட்டுமே தாண்டி இருக்கிறார். எனவே இந்திய பேட்டிங் யூனிட் மிகவும் அனுபவம் அற்றதாக காணப்படுகிறது.

இந்த நிலையில் நாளை சர்பராஸ் கான் மற்றும் தேவ்தத் படிக்கல் இருவரில் யாருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்? என்கின்ற பெரிய பேச்சு வார்த்தைகள் வெளியே சென்று கொண்டிருக்கிறது. சர்ப்ராஸ் கான் கடந்த காலங்களில் தேவைக்கு அதிகமாக உள்நாட்டில் ரன்கள் அடித்திருக்கிறார். அதே சமயத்தில் இந்த சீசனில் ரங்கள் அடித்து மிகச் சிறப்பான பேட்டிங் ஃபார்மில் தேவ்தத் படிக்கல் இருக்கிறார். எனவே யாரை தேர்ந்தெடுப்பது என்கின்ற குழப்பம் இருக்கிறது.

- Advertisement -

இது குறித்து ஆஸ்திரேலியா முன்னால் வீரர் பிராட் ஹாக் கூறும்பொழுது “இந்திய அணி நிர்வாகம் சர்ப்ராஸ் கானை விட்டு தேவ்தத் படிக்கல் இடம் செல்வார்கள் என்று நான் பார்க்கிறேன். அவர் ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழ்நாட்டுக்கு எதிராக ஒரு சிறப்பான சதம் அடித்தார்.அது ஒரு அற்புதமான இன்னிங்ஸ். ராகுல் டிராவிட் சிறந்த டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக இருந்திருக்கிறார். எனவே தேவ்தத் படிக்கல் அப்படியான ஒரு பேட்ஸ்மேன் ஆக வருவார்.

ஐபிஎல் தொடரில் சர்ப்ராஸ் கான் வேகத்தில் தடுமாறியதை நாம் பார்ப்போம். எனவே இதில் வேலை செய்வதற்காக வலைப்பயிற்சியில் பும்ராவை சர்பராஸ் கான் எதிர்கொள்ளும்படி ராகுல் டிராவிட் செய்திருந்தால், சர்பராஸ் கான் சிறப்பாக எதிர்கொண்டு விளையாடு இருந்தால், நான் சர்ப்ராஸ் கானை அணியில் எடுப்பேன்.

ஆனால்இதையெல்லாம் தாண்டி நான் கொஞ்சம் பார்ப்பது என்னவென்றால், படிக்கல் சிறந்த நிலையில் இருக்கிறார். எனவே நான் அவரையே தேர்ந்தெடுப்பேன். இது சர்ப்ராஸ் கானுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை என்று தெரியும். ஆனால் அந்த இடத்தில் ஒரு இடது கை பேட்ஸ்மேன் இருப்பது சிறப்பானது.

இதையும் படிங்க : 3வது டெஸ்ட்.. அதிரடியாக பிளேயிங் லெவனை வெளியிட்டது இங்கிலாந்து.. செம ட்விஸ்ட்

புள்ளி விபரங்களை பார்க்கும் பொழுது தவறான ஷார்ட் விளையாடுவதில் இந்தியாவை விட இங்கிலாந்து குறைவாக இருக்கிறது. இங்கிலாந்து ஆக்ரோஷமான முறையில் விளையாடும் என்பதால், பேட்டிங் செய்ய சாதகமான ராஜ்கோட் ஆடுகளத்தில், இங்கிலாந்து கொஞ்சம் முன்னணியில் இருக்கும்” எனக் கூறியிருக்கிறார்.