11 ஓவர்ல என்ன இது?.. ஹர்திக் பாண்டியா மோசமான கேப்டன்சி – யூசுப் பதான் நேரடி விமர்சனம்

0
947
Hardik

நடப்பு 17 வது ஐபிஎல் சீசனுக்கு மும்பை இந்தியன்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து ஹர்திக் பாண்டியாவை டிரேடிங் செய்து கொண்டு வந்தது. மேலும் தங்கள் அணியின் வெற்றிகரமான கேப்டன் ரோஹித் சர்மாவை பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டு, புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை நியமித்தது. இது ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் அணியில் விளையாடும் சில இந்திய வீரர்களுக்கும் பிடிக்கவில்லை. இதனால் வெளியில் நிறைய சலசலப்புகள் சென்று கொண்டிருக்கிறது.

இதனையில் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில், பும்ரா இருக்கும்பொழுது துவக்கத்திலேயே பந்து வீசி ரன்கள் கொடுத்தது, மேலும் பேட்டிங் செய்கையில் டிம் டேவிட்டை முன்னால் அனுப்பிவிட்டு ஹர்திக் பாண்டியா தாமதமாக சென்றது என நிறைய விமர்சனங்கள் இருந்தன. அந்த போட்டியை மும்பை இந்தியன்ஸ் தோற்றது.

- Advertisement -

இந்த நிலையில் இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் டாஸ் வென்று முதலில் பந்து வீசி 277 ரன்களை மும்பை இந்தியன்ஸ் அணி வீட்டுத் தந்தது. ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணி விட்டுத்தந்த மிக அதிகபட்ச ரன் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டியில் இரண்டாவது ஓவரை வீசியாக ஹர்திக் பாண்டியா, பவர் பிளேவில் ஒரே ஒரு ஓவரை மட்டும் பும்ராவுக்கு கொடுத்துவிட்டு, ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மா இருவரும் மிகவும் அதிரடியாக விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது, பும்ராவை பத்து ஓவர் பாண்டியும் பந்து வீச மீண்டும் கொண்டு வரவில்லை. இதற்குள் ஹைதராபாத் அணி எவ்வளவு ரன்கள் வேண்டுமோ அவ்வளவு ரன்களை எடுத்துக் கொண்டது.

தற்பொழுது இது குறித்து தன்னுடைய விமர்சனத்தை முன் வைத்துள்ள யூசுப் பதான் டிவீட் செய்யும் பொழுது ” ஹைதராபாத் அணி 11 ஓவர்களுக்கு 160 ரன்கள் எடுத்திருக்கிறது. ஆனால் உங்களுடைய சிறந்த பந்துவீச்சாளர் பும்ரா ஒரு ஓவர் மட்டுமே வீசி இருக்கிறார். நிச்சயமாக எனக்கு இது நல்ல கேப்டன்சியாக தெரியவில்லை. ஹர்திக் பாண்டியா மோசமான கேப்டன்சி செய்கிறார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : 23 பந்து 63 ரன்.. ஹெட் சொன்னார் நான் செஞ்சேன் – ஆட்டநாயகன் அபிஷேக் சர்மா பேச்சு

முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டாம் மூடி இதுகுறித்த டிவீட் செய்யும் பொழுது “பும்ரா எங்கே? ஆட்டம் கிட்டத்தட்ட முடிந்து விட்டது. ஆனால் உங்கள் அணியின் மிகச் சிறந்த பந்துவீச்சாளரோ ஒரு ஓவர் மட்டும்தான் பவுலிங் செய்திருக்கிறார்” என்று விமர்சனம் செய்திருக்கிறார். இதைத் தாண்டி மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்கள் பலரும் தங்களுடைய எதிர்ப்பை ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக சமூக வலைதளத்தில் வெளிப்படுத்தி வருகிறார்கள்.