23 பந்து 63 ரன்.. ஹெட் சொன்னார் நான் செஞ்சேன் – ஆட்டநாயகன் அபிஷேக் சர்மா பேச்சு

0
1441
SRH

நடப்பு ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தனது முதல் வெற்றியை அதிரடியான முறையில் பதிவு செய்திருக்கிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அனுப்பி எதிரான முதல் போட்டியில் வெல்லும் வாய்ப்பிலிருந்து கடைசி நேரத்தில் தோல்வி அடைந்தது.

இன்று ராஜீவ் காந்தி ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு 18 பந்துகளில் டிராவிஸ் ஹெட் அரைசதம் அடித்தார். இன்றைய போட்டியில் மூன்றாவது இடத்தில் வந்த இளம் இந்திய வீரர் அபிஷேக் சர்மா ஹெட்டை விட அபாரமாக விளையாடி 16 பந்தில் அரைசதம் அடித்தார்.

- Advertisement -

இவர்கள் இருவரும் ஏற்படுத்திக் கொடுத்த வலிமையான அடித்தளத்தை பயன்படுத்திக்கொண்ட ஹென்றி கிளாசன் 32 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 80 ரன்கள் குவித்தார். இவர்களின் அதிரடியால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 277 ரன்கள் குவித்தது. ஐபிஎல் தொடரில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுதான்.

இதற்கு அடுத்து விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திலக் வருமா 34 பந்துகளில் அதிரடியாக 64 ரன்கள் எடுத்து போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வைத்திருந்தார். ஆனால் இவர் ஆட்டம் இழந்த பிறகு, 15ஆவது ஓவரில் இருந்து போட்டி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பக்கம் திரும்பியது. முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 246 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இன்றைய போட்டியில் 23 பந்தில் 63 ரன்கள் குவித்த இந்திய இளம் வீரர் அபிஷேக் ஷர்மா ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆட்டநாயகன் விருது பெற்ற அவர் பேசும் பொழுது “ஏற்கனவே கடந்த முறை பேட்டியில் நான் சொன்னது போல, உள்நாட்டுப் போட்டிகளில் சிறப்பாக விளையாடியது எனக்கு நல்ல நம்பிக்கையை கொடுத்து இருக்கிறது. எங்கள் அணியில் பேட்டர்களுக்கான செய்தி என்னவென்றால், களத்திற்குள் போங்கள் அதிரடியாக விளையாடுங்கள் என்பதுதான்.

- Advertisement -

இதையும் படிங்க : இப்படி நடக்கும்னு நினைக்கவே இல்ல.. இதனாலதான் தோத்துட்டோம் – ஹர்திக் பாண்டியா பேட்டி

எனக்கு ஹெட் மிகவும் பிடித்த பேட்ஸ்மேன். நான் அவருடன் பேட்டிங் செய்வதை ரசிக்கிறேன். அவர் என்னிடம் உன்னுடைய ஜோனில் பந்து இருந்தால் நீ அடித்து விடு என்று கூறினார். அதேபோல் எனக்கு பந்து அடிக்கக்கூடிய இடத்தில் இருக்கும் பொழுது நான் அடித்தேன். அணியில்எந்த இடத்தில் விளையாட வாய்ப்பு கிடைத்தாலும் அதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். நேற்று இரவு லாரா சார் இடம் பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்தது இன்று உதவியது. பயிற்சியில் நான் பேட்டிங் செய்வதை விட அதிகம் பந்து வீசுவேன். என்னால் பந்து வீச்சிலும் நல்ல பங்களிப்பை கொடுக்க முடியும்” என்று கூறியிருக்கிறார்.