அன்று 2016 தோனிக்கு செய்ததை.. இன்று கேஎல் ராகுலுக்கு செய்த லக்னோ ஓனர்.. ரசிகர்கள் கோபம்

0
13812
Dhoni

இன்று ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில், ஹைதராபாத் அணிக்கு எதிராக பத்து விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணி படுதோல்வி அடைந்தது. இந்த தோல்விக்குப் பிறகு மைதானத்திற்குள் வந்த லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா லக்னோ அணியின் கேப்டன் கேஎல்.ராகுல் உடன் கடுமையான விவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை கிளப்பியிருக்கிறது.

இன்றைய போட்டியில் பேட்டிங் செய்த லக்னோ அணி முதலில் மிகவும் மெதுவாக விளையாடியது. குறிப்பாக கேப்டன் கே.எல்.ராகுல் ஆமை வேகத்தில் விளையாடினார். அவர் 33 பந்துகளில் 29 ரன்கள் மட்டுமே எடுத்தார். கடைசியாக ஆயுஸ் பதோனி அதிரடியாக 30 பந்தில் 55 ரன்கள் எடுக்க, 20 ஓவர்களில் லக்னோ அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

இதைத்தொடர்ந்து விளையாடிய ஹைதராபாத் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள், இதுவரைக்கும் இல்லாத அளவுக்கு அதிரடியாக விளையாடினார்கள். பவர் பிளேவில் மட்டுமே 107 ரன்கள் குவித்தார்கள். தொடர்ந்து விளையாடியவர்கள் 9.4 ஓவர்களில் இலக்கை எட்டி அணியை அபார வெற்றி பெற வைத்தார்கள்.

டிராவிஸ் ஹெட் 30 பந்தில் 89 ரன், அபிஷேக் ஷர்மா 28 பந்தில் 78 ரன் குவித்தார்கள். லக்னோ அணி பேட்ஸ்மேன்கள் மெதுவாக விளையாடிய ஒரு ஆடுகளத்தில், ஹைதராபாத் அணி பேட்ஸ்மேன்கள் இந்த அளவிற்கு ஆக்ரோஷமாக விளையாடியது லக்னோ அணி உரிமையாளரை மிகவும் கோபப்பட வைத்துவிட்டது.

இதன் காரணமாக போட்டி முடிந்து உள்ளே வந்த லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா கேப்டன் கே.எல் ராகுலுடன் தனது அதிருப்தியை உரையாடலில் வெளிப்படுத்தியது தெளிவாகத் தெரிந்தது. கேஎல்.ராகுல் ஏதோ பதில் சொல்லும் பொழுது, அதெல்லாம் அப்படி கிடையாது நீங்கள் செய்தது தவறு என்பது போல் அவர் பேசுவது பார்ப்பதற்கு புரியும் அளவுக்கு இருந்தது.

- Advertisement -

இதையும் படிங்க : எங்க பவுலர்கள் எங்க கிட்ட ஒன்னு சொன்னாங்க.. ஆனா நானும் ஹெட்டும் பேசிக்கிட்டதே வேற – அபிஷேக் ஷர்மா பேச்சு

2016 ஆம் ஆண்டு புனே அணியை இதே உரிமையாளர்தான் வாங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வருடம் அந்த அணிக்கு கேப்டனாக தோனி இருந்து, அந்த அணி மோசமாக தோல்விகளை சந்தித்து பிளே ஆப் சுற்றுக்கு செல்லவில்லை. இந்த நிலையில் அணிய உரிமையாளர் தோனி உடன் சண்டையிட்டு அவரது கேப்டன் பதவியை பறித்து அடுத்த வருடம் ஸ்மித் இடம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. தோல்விகளை ஏற்றுக் கொள்ள முடியாத அணி உரிமையாளராக சஞ்சீவ் கோயங்கா இருப்பது, இந்த நிகழ்வை பார்த்த ரசிகர்களை கோபம் அடைய வைத்திருக்கிறது. சிஎஸ்கே அணி உரிமையாளருக்கும் மற்றவர்களுக்கும் இதுதான் வித்தியாசம் என்று ரசிகர்கள் பேசுகிறார்கள்!