பவுலரான நான் ஹெட் அபிக்கு என்ன சொல்றது.. இவங்களுக்கு பந்து போடவே முடியாது – பாட் கம்மின்ஸ் பேட்டி

0
859
Cummins

நடப்பு ஐபிஎல் தொடரின் நேற்று ஹைதராபாத் அணி தங்கள் சொந்த மைதானத்தில் வைத்து லக்னோ அணியை பந்தாடியது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் 9.4 ஓவரில் 167 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றார்கள். இதுகுறித்து அணியின் பாட் கம்மின்ஸ் மிகவும் புகழ்ந்து பேசி இருக்கிறார்.

நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. ஆனால் அவர்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப வேகத்தில் விளையாடவில்லை. மிகவும் மந்தமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்கள். இறுதியில் ஆயுஸ் பதோனி 30 பந்தில் 55 ரன் எடுக்க அந்த அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 165 ரன் சேர்த்தது.

- Advertisement -

தொடர்ந்து விளையாடிய ஹைதராபாத் அணி முதல் ஓவரில் இருந்து அதிரடியை கையில் எடுத்தது. வழக்கம்போல் அவர்களுடைய அதிரடியில் விளையாடினாலும், இன்றைய போட்டியில் துவக்க ஆட்டக்காரர்கள் இருவருமே போட்டியை எவ்வளவு சீக்கிரத்தில் முடிக்க முடியுமோ அதில் கவனமாக இருந்தார்கள்.

முதல் ஆறு ஓவர்களில் 107 ரன் குவித்தவர்கள், 9.4 ஓவரில் 167 ரன் எடுத்து ஒட்டுமொத்த போட்டியையும் முடித்து விட்டார்கள். இந்த வெற்றி ஹைதராபாத் அணி ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், அணியின் கேப்டன் கம்மின்ஸ்க்கும் மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.

போட்டி முடிவுக்கு பின் பேசிய பாட் கம்மின்ஸ் “ஒருவேளை எங்கள் துவக்க ஆட்டக்காரர்கள் ஆடுகளத்தை மாற்றி விட்டார்கள் என்று நினைக்கிறேன். நாங்கள் அவர்களை அவர்கள் வழியில் விளையாட விட்டு விட்டோம். இருவருமே மிகவும் பாசிட்டிவானவர்கள். நான் ஒரு பவுலர் எனவே அவர்களுக்கு அறிவுரை சொல்வது மிகவும் கடினமாக இருக்கிறது. ஹெட் கடந்த இரண்டு வருடங்களாக இப்படித்தான் கடினமான இடங்களில் அடிப்பார். நல்ல மிடில் செய்து ஆடுவார். ஆனால் பார்ப்பதற்கு மரபான பேட்டிங் போல இருக்காது.

- Advertisement -

இதையும் படிங்க: அன்று 2016 தோனிக்கு செய்ததை.. இன்று கேஎல் ராகுலுக்கு செய்த லக்னோ ஓனர்.. ரசிகர்கள் கோபம்

அதே சமயத்தில் அபிஷேக் ஷர்மா சுழல் மற்றும் வேகம் என இரண்டிலும் நம்ப முடியாத பேட்ஸ்மேன். இரண்டு பீல்டர்களை மட்டுமே வெளியில் வைத்துக் கொண்டு அவர்களுக்கு பந்து வீசுவது மிகவும் கடினமாக இருக்கும். தற்போது டி20 கிரிக்கெட்டின் ஸ்கோர்கள் மிகவும் உயர்ந்து விட்டது. எனவே வீரர்கள் ரன்கள் எடுக்கச் செல்லும் பொழுது அவர்களை தடுப்பது கடினம். அதே சமயத்தில் 10 ஓவர்களுக்குள் போட்டியை முடிப்பது உண்மையாக நம்ப முடியவில்லை” என்று கூறி இருக்கிறார்.