எங்க பவுலர்கள் எங்க கிட்ட ஒன்னு சொன்னாங்க.. ஆனா நானும் ஹெட்டும் பேசிக்கிட்டதே வேற – அபிஷேக் ஷர்மா பேச்சு

0
2208
Abhishek

இன்று தங்களது சொந்த மைதானத்தில் லக்னோ அணிக்கு எதிராக, ஹைதராபாத் துவக்க ஜோடி ருத்ர தாண்டவம் ஆடியது. போட்டியின் வெற்றி குறித்து ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா பேசியிருக்கிறார்.

இன்றைய போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்ய முடிவு எடுத்த லக்னோ அணியை அதற்கு ஏற்றபடி பேட்டிங் செய்ய முடியவில்லை. ஒரு பக்கம் ஹைதராபாத் சிறப்பாக பந்து வீசினாலும் கூட, லக்னோ அணியின் கேப்டன் கேஎல்.ராகுல் மந்தமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

இறுதிக்கட்டத்தில் ஆயுஷ் பதோனி 30 பந்தில் 55 ரன், பூரன் 26 பந்தில் 48 ரன் எடுக்க, ஒரு வழியாக லக்னோ அணி நான்கு விக்கெட் இழப்புக்கு கௌரவமாக 165 ரன்கள் எடுத்தது. ஆடுகளம் மெதுவாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில், இந்த இலக்கு போராடுவதற்கு சரியாக இருக்கும் என்று நினைக்கப்பட்டது.

இப்படியான நிலையில் உள்ளே புகுந்த ஹைதராபாத் தொடக்க ஜோடி 9.4 ஓவரில் 167 ரன்கள் எடுத்து ஆட்டத்தை முடித்து விட்டது. ஹெட் 30 பந்தில் 89 ரன்கள் எடுக்க, அபிஷேக் ஷர்மா 28 பந்தில் 75 ரன்கள் எடுத்தார். பத்து ஓவர்களுக்குள் 150 ரன்களை துரத்திய முதல் ஜோடி என ஐபிஎல் தொடரில் இந்த ஜோடி சாதனை படைத்து பத்து விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

போட்டிக்கு பிறகு பேசிய அபிஷேக் ஷர்மா கூறும் பொழுது “இப்படி ஒரு போட்டிக்கு வந்து இவ்வளவு ஸ்ட்ரைக் ரைட்டில் நான் விளையாடுவேன் என்று எப்பொழுதும் நினைத்தது கிடையாது. ஆனால் அணி நிர்வாகத்திடமிருந்து எனக்கான செய்தி மிகவும் தெளிவாக இருந்தது. இதற்காக நான் அவர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். வெற்றிக்கு முழு பெருமையும் ஹெட்டுக்கே சேரும். ஏனென்றால் அவர் எல்லா பந்துவீச்சாளர்களையும் அடித்து நொறுக்கி அழுத்தத்தை குறைக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : இது டி20 உலக கோப்பைக்கு ஹெல்ப் பண்ண போகுது.. 12 மாசத்துக்கு முன்ன கொடுத்த பிளான்தான் – டிராவிஸ் ஹெட் பேட்டி

இதன் காரணமாக நான் பந்தை பார்த்து ரியாக்ட் செய்தால் போதுமானதாக இருக்கிறது. இன்னிங்ஸ் இடைவேளையின் போது பந்துவீச்சாளர்கள் பந்து வீச ஆடுகளம் சிறப்பாக இருப்பதாக கூறினார்கள். ஆனால் அப்படி ஒன்றும் இருப்பதாக தெரியவில்லை என நானும் ஹெட்டும் பேசிக் கொண்டோம். ஐபிஎல் தொடருக்கு முன்பாக உழைத்த உழைப்பு தற்போது வெளிப்படுகிறது என்று நினைக்கிறேன். வழக்கம்போல் யுவி பாஜி, பிரையன் லாரா மற்றும் என்னுடைய முதல் பயிற்சியாளராக இருக்கும் என்னுடைய தந்தைக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.