WPL 2024.. பெண்கள் கிரிக்கெட்டில் வீசப்பட்ட அதிவேக பந்து.. மும்பை இந்தியன்ஸ் வீராங்கனை புது சாதனை

0
145
Ismail

தற்போது இந்தியாவில் பெண்களுக்கான டி20 கிரிக்கெட் லீக் டபுள்யுபிஎல் இந்திய கிரிக்கெட் வாரியத்தால் இரண்டாவது சீசன் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது. மொத்தம் இதில் ஐந்து அணிகள் கலந்து கொள்கின்றன.

நேற்று இதில் ஒரு போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டி ஆண்கள் டி20 கிரிக்கெட்டுக்கு இணையாக ரன்கள் அடிக்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்தது.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு கேப்டன் மெக் லானிங் 38 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார். ஷபாலி வர்மா 12 பந்தில் 28 2 எடுத்தார்.

இந்த அதிரடியான அடித்தளத்தை பயன்படுத்திக் கொண்ட ஜெமிமா ரோட்டரிக்குயூஸ் 33 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்கள் உடன் 69 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் மிரட்டினார். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்தது.

பெரிய இலக்கை நோக்கி தொடர்ந்து விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் மட்டுமே எடுத்தது. டெல்லி கேப்பிட்டல் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த வேகப்பந்துவீச்சு வீராங்கனை சப்னிம் இஸ்மாயில் பெண்கள் கிரிக்கெட்டில் அதிவேகப் பந்தை வீசி ஆச்சரியப்படுத்தினார்.

நேற்று இவர் தனது மூன்றாவது ஓவரில் மணிக்கு 132.1 கிலோமீட்டர் வேகத்தில் பந்தை வீசினார். அந்தப் பந்து மெக் லானிங் பேடை தாக்கியது. ஆனால் அவுட் கொடுக்கப்படவில்லை.

இதையும் படிங்க : “நீங்க பாஸ்பால் விளையாடினதுக்கு பரிசு.. பாயிண்ட்ஸ் டேபிள்ல 8வது இடம்.. திருந்த பாருங்க” – நாசர் ஹுசைன் விமர்சனம்

சர்வதேச கிரிக்கெட்டில் இவர் தான் மணிக்கு 127 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசி அதிவேக பந்தை பதிவு செய்திருந்தார். 130 கிலோமீட்டர் வேகத்தை எந்த வீராங்கனை யாவது எட்டுவார் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட 35 வயதான சப்னிம் இஸ்மாயிலே மீண்டும் திரும்பி வந்து டபுள்யுபிஎல் டி20 லீக்கில் பல வருட எதிர்பார்ப்பை நிறைவேற்றி இருக்கிறார்.