“நீங்க பாஸ்பால் விளையாடினதுக்கு பரிசு.. பாயிண்ட்ஸ் டேபிள்ல 8வது இடம்.. திருந்த பாருங்க” – நாசர் ஹுசைன் விமர்சனம்

0
127
Hussain

2022 ஆம் ஆண்டு இறுதியில் இருந்து பென் ஸ்டோக்ஸ் தலைமையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி அதிரடியான அணுகுமுறையை டெஸ்ட் கிரிக்கெட்டில் கொண்டு வந்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் வேகமாக விளையாடி ரன்கள் எடுக்க முடியாதா? என்ற மக்களின் ஏக்கத்திற்கு அவர்கள் பேட்டிங் அணுகுமுறை தீர்வாக இருந்ததால் பெரிய வரவேற்பு கிடைத்தது.

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் பேட்டிங் அணுகுமுறைக்கு இங்கிலாந்தில் மட்டும் இல்லாமல் வெளி கிரிக்கெட் நாடுகளில் இருந்தும் ரசிகர்கள் கிடைத்தார்கள். இங்கிலாந்து விளையாடும் டெஸ்ட் போட்டிகள் மற்றும் செய்திகள் குறித்து தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டினார்கள்.

- Advertisement -

இதன் காரணமாக தற்காலத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டை மீட்க வந்த ரட்சகனாக இங்கிலாந்து கிரிக்கெட் அணி பிம்பப்படுத்தப்பட்டது. இங்கிலாந்து மீடியாக்கள் இங்கிலாந்தின் அணுகுமுறையை மிகப்பெரிய உயரத்தில் வைத்து பேசின.

இவ்வளவு புகழடைந்திருந்த அவர்களது பேட்டிங் அணுகுமுறையான பாஸ்பால் அணுகுமுறை இந்திய சுற்றுப்பயணத்தில் அடி வாங்க ஆரம்பித்ததும், ஒட்டுமொத்தமாக புகழ்ந்த அனைவரும் தற்போது இங்கிலாந்து பேட்டிங் அணுகுமுறை குறித்து கேள்வி எழுப்ப ஆரம்பித்து விட்டார்கள். இங்கிலாந்து இந்த அணுகு முறையில் முதல் முறையாக இந்தியாவில் தொடரை தோற்று இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் கூறும்பொழுது ” இந்த இங்கிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட்டை மக்கள் விரும்பி பார்ப்பதற்கு செய்த எல்லா நல்ல காரியங்களுக்காக இப்போது அவர்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் எட்டாவது இடத்தில் இருக்கிறார்கள்.

- Advertisement -

என்னை பொருத்தவரை போட்டியில் முடிவுகள் மிக முக்கியம். நீங்கள் ஒரு தொடரில் எத்தனை விக்கெட் எடுத்தீர்கள்? எவ்வளவு ரன் அடித்தீர்கள்? தொடரை வென்றீர்களா? இல்லையா என்பதுதான் இங்கு முக்கியமானது. நீங்கள் எப்படி விளையாடினீர்கள்?என்பது முக்கியம் கிடையாது.

இந்த இங்கிலாந்து அணி கடந்த இரண்டு ஆண்டுகளில் பார்ப்பதற்கு சிறந்த கிரிக்கெட்டை கொடுத்தது. ஆனால் வெற்றி தோல்வி விகிதம் என்பதை முக்கியமாக பார்க்க வேண்டும். எனவே தரம்சாலாவில் துவங்கும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் வென்று மூன்றுக்கு இரண்டு என தொடரை முடிக்க வேண்டும்.

இதையும் படிங்க : “3-1 இருந்தா நாங்க தோத்துட்டோம்னு அர்த்தம் கிடையாது.. டீம் வேற மாதிரி இருக்கு” – பென் ஸ்டோக்ஸ் பேச்சு

தற்பொழுது அவர்கள் தொடரை இழந்து விட்டார்கள் என்பது உண்மைதான். ஆனாலும் அவர்கள் மூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டியில் வெல்வதற்கான வாய்ப்பு இருந்து அந்த சந்தர்ப்பங்களை தொடர்ந்து நழுவ விட்டார்கள். அவர்கள் இந்த தொடரின் அனைத்து போட்டிகளிலும் இந்திய அணியுடன் சிறந்த சவாலை வெளிப்படுத்தினார்கள். ஆனால் போட்டிகளில் கிடைத்த வாய்ப்புகளை அவர்கள் வீணடித்து விட்டார்கள்” என்று கூறி இருக்கிறார்.