இந்த டீம வச்சுக்கிட்டு இவ்வளவு தூரம் வந்தது மகிழ்ச்சி.. ஆனா எனக்கு இதனால தனிப்பட்ட ஏமாற்றம் – ருதுராஜ் பேட்டி

0
416
Ruturaj

இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற முக்கியமான போட்டியில் சிஎஸ்கே அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்று ஆர்சிபி ப்ளே ஆப் வாய்ப்புக்கு தகுதி பெற்றது. இந்த நிலையில் சிஎஸ்கே அணி பிளே ஆப் வாய்ப்பில் இருந்து வெளியேறியது. இது குறித்து சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் போட்டிக்குப் பின் பேசியிருக்கிறார்.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே முதலில் பந்து வீச முடிவு செய்தது. ஆர் சி பி அணிக்கு விராட் கோலி 29 பந்தில் 47 ரன்கள், கேப்டன் பாப் டு பிளேசிஸ் 39 பந்தில் 54 ரன்கள், ரஜத் பட்டிதார் 23 பந்தில் 41 ரன்கள், கேமரூன் கிரீன் 17 பந்தில் 38 ரன்கள் எடுத்தார்கள். 20 ஓவர்களில் ஆர்சிபி அணி 5 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

இதைத் தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய சிஎஸ்கே அணிக்கு ரச்சின் ரவீந்தரா 37 பந்தில் 61 ரன்கள், ரவீந்திர ஜடேஜா 22 பந்தில் 42 ரன்கள், ரகானே 22 பந்தில் 33 ரன்கள், தோனி 13 பந்தில் 25 ரன்கள் எடுத்தார்கள். இறுதியில் அந்த அணியால் 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இறுதியில் ஆர்சிபி அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என்கின்ற நிலையில், அசத்தலாக தொடர்ந்து ஆறாவது போட்டியில் வென்று பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. தோல்வி அடைந்த சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது.

தோல்விக்குப் பின் பேசிய சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறும்பொழுது “இது ஒரு நல்ல விக்கெட். இதில் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு கொஞ்சம் நல்ல சாதகங்கள் இருந்தது. நாங்கள் நிர்ணயித்த டார்கெட் எங்களுக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது. இந்த சீசனை பொறுத்தவரை 14 போட்டிகளில் 7 போட்டிகள் வெற்றி பெற்றது மகிழ்ச்சி. வீரர்களின் காயம் ஆரம்பத்தில் இருந்து பிரச்சனையாக இருந்தது. கான்வே இல்லாதது, முஸ்தஃபீஸூரை இழந்தது என தொடர்ந்து வந்தது.

- Advertisement -

இதையும் படிங்க: கடைசி ஓவர் 16 ரன்.. தொடர்ந்து 6வது வெற்றி.. பிளே ஆஃபில் ஆர்சிபி.. சிஎஸ்கே வெளியேறியது

அணியில் அதிகப்படியான காயங்கள் வீரர்களுக்கு உருவானால் அணியின் சமநிலையை சரி செய்வது கடினம். எங்களால் எல்லையைத் தாண்டி இலக்கை அடைய முடியவில்லை. ஆனால் இவையெல்லாம் நடக்கலாம். இறுதியாக நமக்கு நல்ல முடிவுகள் தேவை. அது கிடைக்கவில்லை என்பதில் தனிப்பட்ட முறையில் நான் ஏமாற்றம் அடைந்து இருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.