இன்று ஐபிஎல் தொடரில் ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிக்கு இடையே நடைபெற்ற போட்டியில், ஆர்சிபி அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது. எட்டு போட்டிகளில் ஏழு தோல்விகள் அடைந்த அந்த அணி, கடைசி ஆறு போட்டிகளையும் வென்று சாதித்து இருக்கிறது. இது குறித்து அணியின் கேப்டன் பாப் டு பிளேசிஸ் பேசியிருக்கிறார்.
இன்றைய போட்டியில் டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணிக்கு அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் பாப் டு பிளேசிஸ் 39 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார். ஆர்சிபி அணி 5 விக்கெட் இழப்புக்கு 218 ரன் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய சிஎஸ்கே அணிக்கு ரச்சின் ரவீந்தரா 37 பந்தில் 61 ரன் எடுத்தார். சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுக்க, ஆர்சிபி அணி 27 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வெற்றிக்குப் பின் பேசிய பாப் டு பிளேசிஸ் கூறும்பொழுது “அருமையான இரவு வெற்றியுடன் முடித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் விளையாடியதிலேயே இது கடினமான பிட்ச் என்று நினைக்கிறேன். மழை நின்று அந்த நானும் விராட்டும் இது 140 அல்லது 150 ரன்கள் எடுக்கின்ற பிட்ச் என்று பேசிக்கொண்டோம். மழை அதிகம் இருப்பதால் நடுவர்கள் தொடர்ந்து போட்டியை தள்ள விரும்பினார்கள். அது அர்த்தமுள்ள விஷயமாக இருந்தது.
நாங்கள் திரும்பி வந்து விளையாடும் பொழுது ராஞ்சி மைதானத்தில் ஐந்தாவது நாள் டெஸ்ட் விக்கெட் போல இருக்கிறது என சான்ட்னர் இடம் கூறினேன். கடந்த ஆறு போட்டிகளாக எங்கள் பேட்ஸ்மேன்கள் நல்ல அதிரடி நோக்கத்துடன் விளையாடுகிறார்கள். நாங்கள் 175 ரன்கள் பாதுகாக்க போதும் என்று நினைப்போம். ஆனால் தோனியை யோசிக்கும் பொழுது, அவர் இப்படியான இலக்கை பலமுறை விரட்டி வெற்றி பெற்றிருக்கிறார். எனவே நாங்கள் ஈரமான பந்தில் பந்து வீசும் முறையை மாற்றினோம்.
நான் யாஸ் தயாலுக்கு ஆட்ட நாயகன் விருது தரப்பட வேண்டும் என்று விரும்பினேன். அவர் பந்து வீசிய விதம் மிகவும் சிறப்பாக இருந்தது. அவருக்கு இந்த விருது தகுதியான ஒன்றாக இருக்கும். கடைசி ஓவருக்கு முன் வேகத்தை எடுத்து விட்டு வீசுவது சிறந்தது என்று கூறினேன். அவர் முதலில் யார்க்கருக்கு சென்று வேலை செய்யவில்லை. பின்பு மெதுவாக வீசி வெற்றி கண்டார்.
இதையும் படிங்க : இந்த டீம வச்சுக்கிட்டு இவ்வளவு தூரம் வந்தது மகிழ்ச்சி.. ஆனா எனக்கு இதனால தனிப்பட்ட ஏமாற்றம் – ருதுராஜ் பேட்டி
இந்த ரசிகர் கூட்டத்தை பொறுத்தவரை நாங்கள் வெற்றி பெறாத போதும் இதே மாதிரி வந்து எங்களை ஆதரித்தார்கள். எங்களுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கிய இந்த கூட்டத்திற்கு நாங்கள் நிச்சயம் அதற்குரிய முறையில் மரியாதை செய்வோம். நாங்கள் அடுத்து நாக் அவுட்டுக்கு செல்கிறோம். இதை ரசித்துவிட்டு அடுத்து வேலைக்கு திரும்ப வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.