மும்பை வான்கடேவில் ஹர்திக்கு எதிரா கத்தினால் வெளியே துரத்தப்படுவார்களா? – உண்மை தகவல் வெளியானது

0
3904
Hardik

நாளை ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிக்கொள்ள இருக்கின்றன. ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி முதல்முறையாக தங்களின் சொந்த மைதானமான மும்பை வான்கடே மைதானத்தில் விளையாட இருக்கிறது.

குஜராத் டைட்டன்ஸ் அணியின் வெற்றிகரமாக கேப்டனாக இருந்த போதும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு டிரேடிங் முறையில் ஹர்திக் பாண்டியா வந்தது குஜராத் ரசிகர்களை பெரிய கோபமடைய வைத்திருக்கிறது. அதே சமயத்தில் ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் கேப்டன் பொறுப்பில் நீக்கப்பட்டு, புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை நியமித்திருப்பதால், மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களும் ஹர்திக் பாண்டியா மேல் கோபமாக இருக்கிறார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் ஹர்திக் பாண்டியாவின் கெட்ட நேரத்திற்கு முதல் போட்டி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக குஜராத் அகமதாபாத் மைதானத்தில் அமைந்தது. இந்த போட்டியின் போது குஜராத் டைட்டன்ஸ் அணிகின்ற ரசிகர்கள் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக மைதானத்தில் கத்தி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தார்கள்.

இது எதிர்பார்த்த விஷயமாக இருந்த போதிலும், மும்பை இந்தியன்ஸ் அணியின் சொந்த ரசிகர்களே அந்த மைதானத்தில் இருந்து ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக கத்தியது, மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றியைக் கொண்டாடியது, அந்த அணி நிர்வாகத்திற்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. இந்தியாவில் இந்தியாவிற்காக விளையாடும் ஒரு நட்சத்திர வீரர் இந்த அளவிற்கு ரசிகர்களால் எதிர்ப்பை சந்தித்தது கிடையாது.

எனவே மும்பை வான்கடே மைதானத்திலும் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடந்தால் அது ஐபிஎல் தொடரில் மிகப்பெரிய அணி நிர்வாகமான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெரிய பின்னடைவாக அமையும். எனவே மைதானத்தில் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக யாராவது கத்தினால் அவர்கள் வெளியே அனுப்பப்படுவார்கள் என்கின்ற செய்தி சமூக வலைதளங்களில் பரவியது.

- Advertisement -

இதையும் படிங்க : வயசு கம்மிதான்.. ஆனா சிஎஸ்கே இந்திய அணியின் எதிர்காலம் இவர்தான் – டேரில் மிட்சல் பேட்டி

இந்த நிலையில் இந்த செய்தி குறித்து தற்பொழுது வந்துள்ள தகவலில் இது தவறாக பரப்பப்பட்ட வதந்தி என்பது தெளிவாகப் பட்டிருக்கிறது. ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக மைதானத்தில் ரசிகர்கள் தங்கள் எதிர்ப்பை காட்டினால், அதற்காக ரசிகர்கள் மைதானத்தை விட்டு வெளியேற்றப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ரசிகர்களை பகைத்துக் கொள்வது முடியாத காரியம் என்பது தெளிவாகி இருக்கிறது.