சிஎஸ்கே தோனியை வச்சு ஒரு செம பிளான் பண்ணி இருக்காங்க.. பேஸிக்கா அது சுதந்திரம் – கம்பீர் பேச்சு

0
1715
Dhoni

நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி மிகவும் முக்கியமான ஒரு கட்டத்தில் இருக்கிறது. 9 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளை வென்று இருக்கிறது. மீதம் இருக்கும் ஐந்து போட்டிகளில் மூன்று போட்டிகளை வெல்ல வேண்டி இருக்கிறது. இந்த நிலையில் சிஎஸ்கே அணி குறித்தும் தோனி குறித்தும் கம்பீர் பேசி இருக்கிறார்.

இந்த ஐபிஎல் தொடரில் தோனி கடைசி சில ஓவர்களுக்கு மட்டுமே வருகிறார். குறிப்பாக அவர் அதிகபட்சம் 10 பந்துகள் இருக்கும் பொழுது வருகிறார். அதே சமயத்தில் அவர் சந்திக்கும் 5 முதல் 7 பந்துகளுக்குள் குறிப்பிட தகுந்த தாக்கத்தை ஸ்கோர் போர்டில் உருவாக்கி விடுகிறார்.

- Advertisement -

தற்போது தோனி இதுவரையில் நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை அவுட் ஆகவில்லை. மேலும் ஆச்சரியப்படுத்தும் 259 ஸ்ட்ரைக் ரேட்டில் 96 ரன்கள் எடுத்திருக்கிறார். கடைசியில் சில பந்துகளை சந்திக்கக்கூடிய பேட்ஸ்மேன்கள் இந்த அளவில் ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கும் பொழுது, அது வெற்றியில் குறிப்பிடத் தகுந்த பங்கை கொண்டிருக்கும். உதாரணமாக நான்கே பந்தில் மும்பைக்கு எதிராக தோனி அடித்த 20 ரன்கள்தான், அந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி வென்ற ரன்களின் வித்தியாசமும்.

இந்த நிலையில் தோனி கடந்த சில வருடங்களாக கடைசி சில ஓவர்களுக்கு மட்டும் வந்து விளையாடுவது குறித்து கம்பீர் தன்னுடைய கருத்தை கூறியிருக்கிறார். மேலும் இதை சிஎஸ்கே அணியின் சிறந்த ஒரு உத்தியாகவும் கம்பீர் பார்க்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து கம்பீர் கூறும் பொழுது “தோனி 8 முதல் 10 பந்துகள் மட்டும் விளையாடுவது சிஎஸ்கே அணியின் ஒரு உத்தி. அது தோனிக்கு முழு சுதந்திரத்தை கொடுக்கிறது. ஒவ்வொரு அணிகளும் வெவ்வேறு உத்திகளை வைத்திருக்கின்றன. கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக சிஎஸ்கே இந்த உத்தியை வைத்திருக்கிறது. சிஎஸ்கே கடைசி நேரத்தில் விளையாடும் தோனிக்கு கொடுத்திருக்கும் சுதந்திரம் வெற்றியை கொடுக்கிறது.

இதையும் படிங்க : ஐசிசி டி20 பேட்ஸ்மேன் ரேங்க்.. வெளியான பட்டியல்.. சூரியகுமார் ஜெய்ஸ்வால் கலக்கல்

நீங்கள் 20 முதல் 25 பந்துகள் விளையாடும் பொழுது இன்னிங்ஸை ஒருங்கிணைக்கும் பொறுப்பு இருக்கிறது. ஆனால் 8 முதல் 10 பந்துகளுக்கு அப்படி கிடையாது. நீங்கள் தைரியமாக சென்று அடித்து விளையாடலாம். வீரர்களுக்கு நாம் பாதுகாப்பு கொடுப்பது முக்கியம். அப்படி பாதுகாப்பு கொடுத்தால் ட்ரெஸ்ஸிங் ரூம் மகிழ்ச்சியாக இருக்கும். அப்படி மகிழ்ச்சியாக இருந்தால் வெற்றி வரும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -