பட்டாசு எல்லாம் வாங்கி வச்சிருந்தோம்.. அவன் அம்மா மனசு உடைஞ்சு போயிட்டாங்க – ரிங்கு சிங் தந்தை பேட்டி

0
1134
Rinku

இந்தியாவில் ஐபிஎல் தொடர் முடிந்து, ஜூன் மாதம் ஆரம்பத்தில் துவங்க இருக்கும் டி20 உலக கோப்பைக்கு நேற்று இந்திய அணி வெளியிடப்பட்டது. இதில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிங்கு சிங் தேர்வாகவில்லை. இதுகுறித்து அவரது தந்தை பேட்டி அளித்திருக்கிறார்.

கடந்த ஆண்டில் இந்திய டி20 கிரிக்கெட்டில் வாய்ப்பு கொடுக்கப்பட்ட ரிங்கு சிங் ஃபினிஷிங் இடத்தில் பேட்டிங்கில் மிகச் சிறப்பான முறையில் செயல்பட்டு வந்தார். பல பெரிய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அவரை மகேந்திர சிங் தோனி உடன் ஒப்பிட்டு பாராட்டினார்கள்.

- Advertisement -

இந்த அளவிற்கு திறமை வாய்ந்த ரிங்கு சிங்கை திடீரென டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையில் கைவிட்டது பலரையும் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் தள்ளி இருக்கிறது. இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் ரிங்கு சிங் தேர்வு விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் தேர்வாளர்களை மிகக் கடுமையான முறையில் விமர்சனம் செய்திருக்கிறார்.

மேலும் பிசிசிஐ தரப்பில் கசிந்த ஒரு தகவலில் ரிங்கு சிங் நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்படாததும், அதற்கு காரணமாக இம்பேக்ட் பிளேயர் விதி இருந்ததும், அவரைத் தேர்ந்தெடுக்காமல் விட்டதில் ஒரு பெரிய பங்கை கொண்டிருப்பதாகக் கூறப்பட்டு இருந்தது.

இப்படியான நிலையில் ரிங்கு சிங் டி20 உலகக்கோப்பை பிளேயிங் லெவனின் இருப்பார் என எதிர்பார்த்து ஏமாற்றமடைந்த அவரது குடும்பத்தினரில், அவரது தந்தை தற்பொழுது பேட்டி அளித்திருக்கிறார். மேலும் அவர் ரிங்கு சிங் இதனால் மனமுடைந்திருக்கிறார் என்றும் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க :

இதுகுறித்து ரிங்கு சிங் தந்தை பேசும்பொழுது ” அவர் இந்திய அணியில் இடம் பெறுவார் என்று எங்களுக்கு நிறைய நம்பிக்கை இருந்தது. இதனால் நாங்கள் இனிப்புகளும் பட்டாசுகளும் வாங்கி வைத்துக் காத்திருந்தோம். மேலும் அவர் 11 பேர் கொண்ட இந்திய அணிகளும் இடம் பெறுவார் என்று நாங்கள் நம்பி இருந்தோம். ஆனால் அவர் 15 பேர் கொண்ட அணியில் இடம் பெறவில்லை என்றும், 18 பேர் கொண்ட அணியில் இடம் பெற்று செல்கிறார் என்றும் தன் தாயிடம் மனம் உடைந்து கூறினார்” என்று தெரிவித்திருக்கிறார்.