ஐசிசி டி20 பேட்ஸ்மேன் ரேங்க்.. வெளியான பட்டியல்.. சூரியகுமார் ஜெய்ஸ்வால் கலக்கல்

0
776
Jaiswal

ஐபிஎல் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், ஐபிஎல் தொடரில் பங்கு பெறாத பாகிஸ்தான் அணி தங்களது சொந்த நாட்டில், இரண்டாம் கட்ட நியூசிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இந்த தொடர் இரண்டுக்கு இரண்டு என சமநிலையில் முடிந்தது. இந்தத் தொடர் முடிவுக்குப் பிறகு ஐசிசி டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலை வெளியிட்டு இருக்கிறது.

ஐசிசி வெளியிட்டிருக்கும் டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் மிடில் வரிசை பேட்ஸ்மேன் சூரியகுமார் யாதவ் 861 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் இருக்கிறார். இரண்டாவது இடத்தில் இருக்கும் வீரரை விட 59 புள்ளிகள் கூடுதலாக எடுத்து முதலிடத்தில் இருப்பது தான் இதில் முக்கியமான விஷயம்.

- Advertisement -

இதற்கடுத்து முதல் பத்து இடத்தில் இன்னொரு இந்திய வீரராக இந்திய டி20 அணியின் இடது கை இளம் துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் ஆறாவது இடத்தில் இருக்கிறார். இவர் மொத்தம் 714 புள்ளிகள் பெற்று இருக்கிறார். மேலும் முதல் 10 இடங்களில் இவர்கள் இருவரை தவிர வேறு எந்த இந்திய பேட்ஸ்மேன்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இங்கிலாந்து மற்றும் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடும் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் பில் சால்ட் 802 புள்ளிகள் பெற்று இருக்கிறார். இவர் கடைசியாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரில் இரண்டு சதங்கள் விளாசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு அடுத்து நடந்து முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் 125 ரன்கள் எடுத்ததின் மூலம் ஐந்தாவது இடத்தில் இருந்து நான்காவது இடத்திற்கு பாபர் அசாம் 763 புள்ளிகள் மூலம் முன்னேறி இருக்கிறார். இதற்கு முன்பாக மூன்றாவது இடத்தில் சக பாகிஸ்தான் வீரரான முகமது ரிஸ்வான் 784 புள்ளிகள் உடன் இருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : பட்டாசு எல்லாம் வாங்கி வச்சிருந்தோம்.. அவன் அம்மா மனசு உடைஞ்சு போயிட்டாங்க – ரிங்கு சிங் தந்தை பேட்டி

ஐசிசி சர்வதேச டி20 கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்கள் :

சூர்யகுமார் யாதவ் – 861
பில் சால்ட் – 802
முகமது ரிஸ்வான் – 784
பாபர் ஆசம் – 763
எய்டன் மார்க்ராம் – 755
யஷஸ்வி ஜெய்ஸ்வால் – 714
ரைலி ரூசோவ் – 689
ஜோஸ் பட்லர் – 680
ரீசா ஹென்ட்ரிக்ஸ் – 660
டேவிட் மாலன் – 657