வயசு கம்மிதான்.. ஆனா சிஎஸ்கே இந்திய அணியின் எதிர்காலம் இவர்தான் – டேரில் மிட்சல் பேட்டி

0
8950
CSK

ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு இது 15 வது சீசன் ஆகும். இதில் ஒட்டுமொத்தமாக இரண்டு சீசன் மட்டுமே அந்த அணிக்கு மோசமாக அமைந்திருக்கிறது. தற்பொழுது ஆரம்பித்திருக்கும் சீசன் கூட மிகவும் சிறப்பாகவே ஆரம்பித்து இருக்கிறது. ஒவ்வொரு தொடரிலும் சிஎஸ்கே அணியை மையமாக வைத்தே ஐபிஎல் சம்பந்தமான பேச்சுகள் இருக்கும்.

இந்த வகையில் நடப்பு ஐபிஎல் தொடரிலும் சிஎஸ்கே அணியின் செயல்பாடுகள் மற்றும் அதன் புதிய கேப்டன் ருதுராஜ், வழக்கம்போல் மகேந்திர சிங் தோனியின் கள செயல்பாடுகள்தான் சமூக வலைதளத்தை பெரிய அளவில் ஆக்கிரமித்திருக்கின்றன. ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி ஏன் பெரிய அணி என்பதை ஒவ்வொரு வருடமும் நிரூபிக்கிறது.

- Advertisement -

நடந்து முடிந்த ஐபிஎல் மினி ஏலத்தில் சிஎஸ்கே அணிக்கு அதிகபட்ச விலையில் 14 கோடி ரூபாய்க்கு நியூசிலாந்தின் மிடில் ஆர்டர் வலதுகை பேட்ஸ்மேன் டேரில் மிட்சல் வாங்கப்பட்டார். இரண்டு போட்டிகளிலும் பேட்டிங்கில் பெரிய அளவில் இன்னும் தனது திறமைக்கு ஏற்ப வெளிப்படாவிட்டாலும், களத்தில் மிகவும் நம்பிக்கை அளிக்க கூடியவராக இருக்கிறார். கடந்த போட்டியில் பந்துவீச்சில் ஒரு விக்கெட்டும் கைப்பற்றி இருக்கிறார்.

இந்த நிலையில் அவர் தமது அணியின் கேப்டன் ருதுராஜ் குறித்து பேசுகையில் ” நான் கடந்த சில வருடங்களாக வெளியில் இருந்து ருதுராஜை பார்த்து வருகிறேன். அவரது பேட்டிங் மூலம் நான் பெரிதும் ஈர்க்கப்பட்டேன். முதலில் அவர் சிறந்த பேட்ஸ்மேன் உலகத் தரமானவர். அவர் இந்திய அணிக்காக நிறைய விளையாடுவார் என்று எதிர்பார்க்கிறேன். அதேபோல் கேப்டனாக எவ்வளவு இயல்பாக நிதானமாக இருக்கிறார் என்பதை பார்க்க நன்றாக இருக்கிறது. அவர் நிச்சயமாக சிஎஸ்கே அணியின் கேப்டனாக நிறைய விஷயங்கள் செய்யப் போகிறார் என்று நம்புகிறேன்.

எங்களுடைய சொந்த மைதானத்தில் சில நேரம் ஆடுகளம் கொஞ்சம் எதுவாக இருக்கும். கடந்த போட்டியில் கூட இரண்டாம் பகுதியில் ஆடுகளம் எதுவாக இருந்ததை நாங்கள் பார்த்தோம். இதன் காரணமாக புதிய பந்தை பயன்படுத்தி எங்கள் வீரர்கள் ரன்கள் எடுப்பதை பார்க்க அருமையாக இருக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : தல தோனியின் உலகசாதனை.. 2 வருடம் கழித்து ரிஷப் பண்ட்டின் மாஸ் கம்பேக்.. டெல்லி ரன் குவிப்பு

சிஎஸ்கே அணிக்காக நான் என்ன பொறுப்பை எடுத்துக் கொண்டிருக்கிறேனோ, அதில் நான் சிறப்பாக செயல்பட முயற்சி செய்வேன். அணியை வெற்றி பெற வைப்பேன். அது பேட்டிங் வரிசையில் நான் எந்த இடத்தில் இருந்தாலும் இப்படித்தான் செயல்பட போகிறேன். மேலும் என்னுடன் யார் விளையாடுகிறார்களோ அவர்களுடன் பேசி சூழ்நிலைக்கு தகுந்தவாறு நாங்கள் திட்டமிட்டு விளையாடுவோம்” என்று கூறியிருக்கிறார்.