ஆர்சிபி அணிக்கு அறிமுகமான அகமதாபாத் மைதான ஊழியரின் மகன்.. யார் இந்த சவுரவ் சவுகான்?

0
57
Saurav

இன்று ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையே ராஜஸ்தான் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் போட்டி நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்த போட்டியில் குஜராத்தைச் சேர்ந்த 23 வயதான லெப்ட் ஹேண்ட் பேட்ஸ்மேன் சவுரவ் சவுகான் என்ற இளம் இந்திய வீரர் அறிமுகம் ஆகியிருக்கிறார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி விளையாடிய நான்கு போட்டிகளில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக மட்டுமே சின்னசாமி மைதானத்தில் வெற்றி பெற்றது. மீதி மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்து புள்ளி பட்டியலில் எட்டாவது இடத்தில் மோசமான நிலைமையில் இருந்து வருகிறது.

- Advertisement -

அதே சமயத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வலிமையான அணியாகக் காணப்படுகிறது. அந்த அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. மேலும் இன்று நான்காவது வெற்றிக்காக ஆர்சிபி அணி உடன் மோதுகிறது.

இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. அந்த அணியில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. அதே சமயத்தில் ஆர்சிபி அணியில் விக்கெட் கீப்பர் அனுஜ் ராவத் நீக்கப்பட்டு, அவருடைய இடத்தில் 22 வயதான இடதுகை பேட்ஸ்மேன் மற்றும் வலதுகை ஆப் பின்னர் குஜராத்தைச் சேர்ந்த சவுரவ் சவுகான் என்ற இளம் வீரர் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறார்.

இவர் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் ஊழியராகப் பணியாற்றும் திலீப் சவுகான் என்பவரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தன்னுடைய வாய்ப்பைப் பற்றி பேசும் பொழுது “நான் இந்த ஆண்டு மொத்தம் இரண்டு அணிகளின் பயிற்சி முகாம்களில் கலந்து கொண்டேன். ஒன்று டெல்லி மற்றொன்று ஆர்சிபி. நான் ஆர்சிபி அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். எனது இந்த வெற்றியை எனது பயிற்சியாளர் தாரக் திரிவேதி மற்றும் குஜராத் கிரிக்கெட்டுக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன். குஜராத் கிரிக்கெட் சங்கம் மிகவும் உதவியாக இருந்தது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : சொல்லியும் கேட்கல.. அபிஷேக் சர்மாவுக்கு இரண்டாவது எச்சரிக்கை கொடுத்த யுவராஜ் சிங்.. என்ன நடந்தது?

இவர் உள்நாட்டில் டி20 கிரிக்கெட் வடிவத்தில் மொத்தம் 19 போட்டிகளில் விளையாடி, 29 ரன்கள் ஆவரேஜில், 152 ரன்கள் ஸ்டிரைக் ரேட்டில் 464 ரன்கள் எடுத்திருக்கிறார். இதில் அதிகபட்சமாக ஆட்டம் இழக்காமல் 84 ரன்கள் எடுத்திருக்கிறார். மேலும் மொத்தமாக நான்கு அரைசதங்கள் அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.