4 டி20 போட்டி 39 ரன்.. சூரியகுமார் இடத்தில் ஆடிய நமன் திர் யார்? வாய்ப்பு கிடைத்தது எப்படி

0
792
Naman

நேற்று குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக குஜராத் அகமதாபாத் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய போட்டியில், அவர்களது பிளேயிங் லெவனில் நிறைய ஆச்சரியப்படத்தக்க முடிவுகள் இருந்தது. போட்டிக்கு முன்பாக பல கிரிக்கெட் வல்லுனர்கள் மும்பை அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கலாம் என்று கூறியதற்கு அப்படியே எதிர் மாறாக அமைந்திருந்தது.

மும்பை இந்தியன்ஸ் அணியில் நேற்றைய போட்டியில் நுவன் துஷாரா, ரொமாரியோ செப்பர்ட், ஆகாஷ் மத்துவால் மற்றும் நெக்கேல் வதேரா ஆகியோர் விளையாடாதது பெரிய ஆச்சரியமாக அமைந்தது. இதற்கு பதிலாக சாம்ஸ் முலானி, லூக் வுட் மற்றும் ஜெரால்ட் கோட்சி, நமன் திர் ஆகியோர் விளையாடியிருந்தார்கள். என்ன காரணத்தினால் இப்படியான பிளேயிங் லெவன் தேர்ந்தெடுக்கப்பட்டது என்று தெரியவில்லை.

- Advertisement -

இதில் சூரியகுமார் இடத்திற்கு பேட்டிங் வரிசையில் மூன்றாம் இடத்தில் நமன் திர் என்ற அறிமுக வீரர் விளையாடினார். இவர் நேற்று ஆப் ஸ்பின் ஒரு ஓவர் பந்து வீசவும் செய்திருந்தார். நெகேல் வதேரா மாதிரி நிரூபித்த ஒரு வீரரை வெளியில் வைத்து, இவருக்கு எப்படி வாய்ப்பு கொடுத்தார்கள் என்பதும்? இவரிடம் அப்படி என்ன சிறப்பு திறமை இருக்கிறது? என்பது குறித்தும் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் போட்டியை பார்த்த எல்லோருக்கும் கேள்வி இருந்தது.

24 வயதான இவர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர். 2023-24ஆம் ஆண்டு ரஞ்சி டிராபியிலும், அதே வருடத்தில் சையத் முஸ்டாக் அலி டி20 தொடரிலும் பஞ்சாப் மாநில அணிக்காக அறிமுகமாகி இருக்கிறார். இதில் இவர் தனது மாநில அணிக்காக மொத்தம் நான்கு டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடியிருக்கிறார். பேட்டிங் வரிசையில் மூன்றாவதாக நான்கு போட்டிகளில் விளையாடிய இவர் மொத்தமாக எடுத்த ரன்கள் 39 மட்டுமே. இவருடைய ரன் சராசரி 9 மட்டுமே இருக்கிறது.

இப்படி இந்த வீரருக்கு புள்ளி விவரங்கள் மிகவும் மோசமாக இருந்தும் கூட, நேற்று மும்பை இந்தியன்ஸ் அணி இவருக்கு வாய்ப்பு கொடுத்ததோடு, சூரியகுமாரின் மூன்றாம் இடத்தில் விளையாடவும் வைத்தது. அந்த இடத்தில் டிவால்ட் பிரிவியஸ் விளையாட வைக்கப்படுவார் என்று பலரும் எதிர்பார்த்து இருந்தார்கள். இப்படி இருந்தும் மும்பை இந்தியன்ஸ் எப்படி வாய்ப்பு தந்தது என்ற குழப்பம் ரசிகர்களுக்கு இருக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : கில் முதல்முறையா கேப்டன்சி பண்றாருனு நம்ப முடியல.. எனக்கே செம ஐடியாஸ் குடுத்தாரு – தமிழக வீரர் சாய் கிஷோர் பேட்டி

இவர் பஞ்சாப் மாநில அணிக்காக சையத் முஸ்டாக் அலி தொடரில் சரியாக விளையாடவில்லை, ஆனால் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெறும் ஷேர்-இ- பஞ்சாப் டி20 தொடரில் மொத்தம் 12 ஆட்டங்களில் 466 ரன்களை, 42.36 ரன் சராசரி மற்றும் 192.56 ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்திருக்கிறார். மேலும் அந்தத் தொடரில் இரண்டு சதங்கள் மற்றும் 30 சிக்ஸர்கள் அடித்த ஒரே வீரராக இவர் மட்டுமே இருக்கிறார். உள் மாநிலத்தில் நடைபெற்ற டி20 தொடரில் கலக்கலாக விளையாடிய காரணத்தினாலே இவரை மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியதோடு வாய்ப்பு கொடுத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.