சிஎஸ்கே 5ல் 5 தோல்வி.. பஞ்சாப் கிங்ஸ் போட்ட பதிவு.. கடுப்பான சென்னை ரசிகர்கள்

0
1284
Ruturaj

இன்று ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்குப் பிறகு பஞ்சாப் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு சிஎஸ்கே ரசிகர்களை கோபப்படுத்தியிருக்கிறது.

இன்றைய போட்டியில் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி ஆரம்பத்தில் பவர் பிளேவில் விக்கெட் இழக்காமல் 55 ரன்கள் எடுத்தது. இதன் காரணமாக அந்த அணி 200 ரன்கள் செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பஞ்சாப் கிங்ஸ் அணியின் சுழல் பந்துவீச்சாளர்கள் ஒட்டுமொத்தமாக சிஎஸ்கே அணியின் ரன் வேகத்தை தடுத்து விட்டார்கள்.

- Advertisement -

மேலும் அதிரடி வீரர் சிவம் துபேவை முதல் பந்திலேயே வெளியேற்றினார்கள். இதன் காரணமாக சிஎஸ்கே அணி தட்டுத்தடுமாறி ஏழு விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்களில் 162 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் ருதுராஜ் 48 பந்தில் 62 ரன்கள் எடுத்தார். வழக்கமாக அதிரடி காட்டி வந்த தோனியாலும் 11 பந்தில் 14 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இதற்கு அடுத்து பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி தைரியமாக விளையாடும் நோக்கத்தை மட்டும் கைவிடாமல் விளையாடியது. இதன் காரணமாக அந்த அணிக்கு ரன்கள் வந்து கொண்டே இருந்தது. ஜானி பேர்ஸ்டோ 46 ரன், ரயிலி ரூசோவ் 43 ரன் எடுத்தார்கள். அந்த அணி வெகு எளிதாக சிஎஸ்கே அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. மேலும் சிஎஸ்கே அணிக்கு எதிராக தொடர்ந்து ஐந்தாவது வெற்றியை அந்த அணி பெற்று இருக்கிறது. அத்தோடு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நான்கு வெற்றிகளை சிஎஸ்கே அணிக்கு எதிராக பெற்று இருக்கிறது.

இந்த நிலையில் இந்த போட்டி துவங்குவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு பஞ்சாப் கிங்ஸ் அணியின் சமூக வலைதள பக்கத்தில் மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி விஜய் பார்த்து கூறுவது போல அலப்பறை கெளப்பறோம் என்ற டெம்ப்ளேட்டை சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியை குறித்து பதிவிட்டு இருந்தது. அப்போது இது யாருக்கும் தவறான ஒன்றாக தெரியவில்லை.

- Advertisement -

இதையும் படிங்க : தோனிக்காகவே வித்தியாசமா யோசிச்சோம்.. தைரியமா அதை செஞ்சோம்.. எல்லாருக்கும் பாராட்டு – சாம் கரன் பேட்டி

இந்த நிலையில் இன்று சிஎஸ்கே அணியை வென்ற பிறகு, பஞ்சாப் கிங்ஸ் அணியின் சமூக வலைதள பக்கத்தில் அதே மாஸ்டர் படத்தில் இருந்து விஜய் விஜய் சேதுபதியிடம் ” என்னை பிடித்தவன் கோடி பேர் இருக்கான்டா” என்று சொல்லக்கூடிய டெம்ப்ளேட்டை, சிஎஸ்கே அணிக்கு எதிரான ஐந்தாவது வெற்றி குறித்து தலைப்பிட்டு பதிவு செய்திருக்கிறது. சிஎஸ்கே அணியிடம் எங்களுக்கும் பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது என்பதை கூறுவது போல் இது அமைந்திருக்கிறது. மேலும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் இந்த பதிவு சிஎஸ்கே ரசிகர்களை கோபப்படுத்தி இருக்கிறது” என்பது குறிப்பிடத்தக்கது.