ஓபனா சொல்றேன்.. என்கிட்ட இருந்ததே ரெண்டே பவுலர்தான்.. ரொம்ப அழுத்தமா இருக்கு- ருதுராஜ் பேட்டி

0
2763
Ruturaj

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களது சொந்த மைதானமான சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், இன்று ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த படுதோல்வி குறித்து சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் பேசியிருக்கிறார்.

சிஎஸ்கே கேப்டன் இந்த ஐபிஎல் தொடரில் அதிக டாசை தோற்ற கேப்டனாக இருக்கிறார். இன்றைய போட்டியிலும் டாஸ் தோற்றது வெற்றியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது. சிஎஸ்கே இரண்டாவது பேட்டிங் செய்யும்பொழுது பனிப்பொழிவு மிகப்பெரிய அளவில் வந்தது. அதே சமயத்தில் முதலில் பேட்டிங் செய்த பொழுது ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு சாதகமாக இருந்தது.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணிக்கு கேப்டன் ருதுராஜ் மட்டுமே குறிப்பிடும்படி நிலைத்து நின்று விளையாடி 48 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார். மற்ற யாராலும் தாக்குப் பிடித்து விளையாடி பெரிய ரன்களுக்கு செல்ல முடியவில்லை. 20 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 7 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாபின் அணிக்கு ஜானி பேர்ஸ்டோ 30 பந்தில் 46 ரன்கள், ரயிலி ரூசோவ் 23 பந்தில் 43 ரன்கள் எடுக்க, அந்த அணியின் வெற்றி மிகவும் சுலபமான முறையில் அமைந்தது. 17.5 ஓவர்களில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.

தோல்விக்கு பிறகு பேசிய சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறும்பொழுது “நாங்கள் 50 முதல் 60 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம் என்று நினைக்கிறேன். நாங்கள் பேட்டிங் செய்யும்பொழுது ஆடுகளம் சிறப்பாக இல்லை பின்பு ஆடுகளம் சிறப்பானதாக மாறியது. இம்பேக்ட் பிளேயர் விதியிலும் எங்களுக்கு சாதகங்கள் இல்லை. டாஸ் பற்றி நான் பயிற்சி செய்தேன். ஆனால் அது களத்தில் வேலை செய்யவில்லை. உண்மையில் டாஸ் போட செல்லும்போது பெரிய அழுத்தமாக இருக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க: 17.5 ஓவர்.. 5வது முறையாக சிஎஸ்கேவை வீழ்த்திய பஞ்சாப்.. பிளே ஆஃப்க்கு ஏற்பட்ட புதிய சிக்கல்

இந்த போட்டியை பொறுத்தவரை 180 ரன்கள் கூட குறைவானதுதான். ஆரம்பத்திலேயே தீபக் சாஹர் காயத்தினால் வெளியேறினார். உண்மையை சொன்னால் எங்களிடம் இரண்டே பந்துவீச்சாளர்கள்தான் இருந்தார்கள். ஏனென்றால் பனிப்பொழிவின் காரணமாக சுழல் பந்துவீச்சாளர்கள் இருவரும் எதுவும் செய்ய முடியாத நிலை உருவாகிவிட்டது. இன்னும் நான்கு ஆட்டங்கள் இருக்கிறது. நாங்கள் மீண்டும் பெற்று பாதைக்கு திரும்பவும் என்று நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.