தோனிக்காகவே வித்தியாசமா யோசிச்சோம்.. தைரியமா அதை செஞ்சோம்.. எல்லாருக்கும் பாராட்டு – சாம் கரன் பேட்டி

0
184
Curran

நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு வரிசையாக மூன்று போட்டிகள் சென்னை சேப்பாக்கம் சொந்த மைதானத்தில் கிடைத்தது. இதில் ஹைதராபாத் அணிக்கு எதிராக மட்டும் வென்று, லக்னோ மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு எதிராக தோல்வி அடைந்திருக்கிறது. இன்று பஞ்சாப் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வென்றது. வெற்றி குறித்து பஞ்சாப் கேப்டன் சாம் கரன் பேசியிருக்கிறார்.

இன்று டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணிக்கு ருதுராஜ் 48 பந்தில் 62 ரன் எடுத்தார். அந்த அணி ஏழு விக்கெட் இழப்புக்கு 162 ரன் எடுத்தது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஜானி பேர்ஸ்டோ 30 பந்தில் 46 ரன்கள், ரூசோவ் 23 பந்தில் 43 ரன்கள் எடுத்தார்கள். பஞ்சாப் 17.5 ஓவரில் மூன்று விக்கெட் மட்டும் இழந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் இலக்கை அடைந்து சிஎஸ்கே அணியை வென்றது.

- Advertisement -

இதை தொடர்ந்து வெற்றிக்கு பிறகு பஞ்சாப் கேப்டன் சாம் கரன் பேசும் பொழுது ” எப்பொழுது சென்னைக்கு வந்து அந்த அணியை வீழ்த்தி இரண்டு புள்ளிகளை எடுத்தாலும் பெரிய மகிழ்ச்சிதான். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலும் சொந்த மைதானத்தில் தோற்று வெளி மைதானங்களில் வெற்றி பெற்றோம். இந்த முறையும் அப்படித்தான் நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடரின் பின் இறுதியில் சிறப்பாக விளையாடக்கூடிய எல்லா அணிகளும் ஆபத்தானது.

இன்னும் ஓரிரு நாட்களில் மீண்டும் சிஎஸ்கே அணிக்கு எதிராக மோத இருக்கிறோம். டாஸ் போட்டியில் பெரிய பங்கு வகித்தது. டாஸ் வென்றது பெரிய விஷயமாக அமைந்துவிட்டது. இன்று ரபாடாவுக்கு புதிய பந்தை கொடுத்தேன். அவர் போட்டியை மிகச் சிறப்பாக ஆரம்பித்து வைத்தார்.

மேலும் 19 ஆவது ஓவருக்கு ராகுல் சாஹரை கொண்டு வந்தோம். அவர் தற்பொழுது அணிக்கு சிறந்த முறையில் திரும்பி வந்திருக்கிறார். 19ஆவது ஓவரில் தோனிக்கு வித்தியாசமாக செய்ய முயற்சி செய்து, அவரிடம் பந்தை கொடுக்க, அவர் மிகச் சிறப்பாக செயல்பட்டார். இன்று சுழற் பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க :ஓபனா சொல்றேன்.. என்கிட்ட இருந்ததே ரெண்டே பவுலர்தான்.. ரொம்ப அழுத்தமா இருக்கு- ருதுராஜ் பேட்டி

அதே சமயத்தில் நான் பந்து வீசி அடி வாங்கினேன். ஆனால் மற்ற வேகப்பந்து பேச்சாளர்கள் எல்லா வழிகளிலும் சிறப்பாக சென்றார்கள். இன்று அதிர்ஷ்டவசமாக அது வேலை செய்தது. அடுத்த சிஎஸ்கே அணிக்கு எதிராக தரம்சாலா மைதானத்தில் விளையாட இருக்கிறோம். நாங்கள் ஒரு நேரத்தில் ஒரு போட்டியை பற்றி மட்டுமே யோசிக்கிறோம். எங்கள் அணியில் இன்று அனைவரும் சிறப்பாக செயல்பட்டார்கள்” என்று கூறி இருக்கிறார்.